பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைச்சர்களேயாம். இந்த உணர்வு செழித்தால்தான் ஜனநாயகம் வளரும். மூதறிஞர் இராஜாஜி, “கட்சி உணர்வுகளை வெளியே வைத்து விட்டுத்தான் கோட்டைக்குள் வரவேண்டும்” என்றார். கட்சி முறை ஆட்சி, அரசை உரிமை கொண்டாடுவதற்கல்ல. தமது கட்சியின் கொள்கைகளை, சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் திறமையைக்காட்ட ஒரு வாய்ப்பு! அவ்வளவுதான்!

கேளாமலே நமக்கு, அறிஞர் அண்ணா செய்த உதவி ஒன்று உண்டு. 1965-ல் நாடு தழுவிய நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்! நாம் மும்மொழித் திட்டத்தை வரவேற்றோம். வரவேற்றாலும் இந்தி ஆதிக்க மொழியாவதை நாம் விரும்பியதில்லை. அமரர் நேருவும் இந்தியை இணைப்பு மொழி என்றே கூறினார். நடுவண் அரசு 1965 குடியரசு நாளன்று இந்தியை நடுவண் அரசின் அலுவல் மொழியாக ஏற்று நடைமுறைப்படுத்துவது; ஆங்கிலத்தை அகற்றுவது என்று முடிவெடுத்தது. இந்த முடிவு அவசரப்பட்ட முடிவு. முதலில் இந்தி-இந்திய மக்கள் அனைவராலும் படிக்கும் மொழியாக - இடம் பெறவேண்டும். அனைத்து மாநிலங் களிலும் மக்களால் இந்தி அங்கீகரிக்கப் பெற்றுப் படிக்கும் முயற்சி நடந்து இந்தி மொழியைப் படிக்கவும் எழுதவும் பெருவாரியான மக்கள் வந்தபிறகே-அலுவல் மொழியாக ஆக்கவேண்டும். உண்மையில் - நடைமுறையில் இந்தி இந்திய மக்களின் இணைப்பு மொழியாக வளர்ந்து இடம் பெற்ற பிறகு அலுவல் மொழியாதல் முறை எளிதும்கூட! தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உணர்வு ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் நடுவண் அரசு எடுத்த முடிவு, இந்தி பேசாத மாநில மக்களிடையே எதிர்ப்பு உணர்வைத் தூண்டியது... மொழிப்போராட்டம் வெடித்தது.


11

மொழிப்போராட்டம் 1965-ல் உச்ச நிலையில் இருந்த போது குன்றக்குடியில் அமைதிகாக்கும் முயற்சி மேற்-