பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

117


கொள்ளப்பெற்றது. அரசையும் மக்களையும் குறிப்பாக மாணவர்களையும் கருத்திற்கொண்டு மொழிச்சிக்கலுக்குத் தீர்வுகாணும் கருத்தரங்குகள் நிகழ்ந்தன. நெல்லை பேராசிரியர் நா. வானமாமலையை அழைத்து, இந்தி மொழிச் சிக்கல், மும்மொழித் திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியன பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப் பெற்றது. மாணவர்கள் ஓரளவு தெளிவுபெற்றனர். அமைதியான சூழ்நிலை-ஆயினும் நிலையான அமைதியல்ல. இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சர்கள் சி. சுப்பிர மணியம், ஓ.வி. அளகேசன் இருவரும் இந்தித் திணிப்பை எதிர்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள் என்ற செய்தியை வானொலி அறிவித்தது; இந்த ராஜினாமாச் செய்தி மாணவர்களிடையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மறுநாள் காலையில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். மீண்டும் மாணவர்களைக் கூட்டிப் பேச முயற்சி செய்யப் பெற்றது. மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவுக்குப் பின் நம்மாலும் ஒன்றும் சொல்ல இயலவில்லை, பல மொழிகளும் கற்பது நல்லது. அதே நேரத்தில் மொழியைக் கற்கும் வாயில்களைக் காணாமல் இந்தி அலுவல் மொழியாக அரங்கேறுதல் தவறான அணுகுமுறை.

குன்றக்குடியில் வன்முறைச் செயல்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற கவலை, செயலாக உருப்பெற்றது. இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்த அனுமதித்துக் கூட்டம் கூடிக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவும் அனுமதி வழங்கப் பெற்று, கறுப்புத் துணியும் தரப்பெற்றது. ஊர்வலம் அமைதியாக நடந்தேற வேண்டும். வருந்தத்தக்க செயல்கள் யாதொன்றும் நடந்துவிடக்கூடாது என்ற கவலை பிடரியைப் பிடித்துத் தள்ள நாம் ஊர்வலத்தின் முன்வரிசையில் சென்றோம். ஊர்வலம் கட்டுப்பாட்டு..ன். அமைதியாகச் சென்றது, "தமிழ் வாழ்க!” என்பது மட்டுமே முழக்கொலி!