பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

121


நாம் உடனடியாக அபராதத்தைக் கட்டி விட்டு விடுதலை யானோம். நிர்வாகச் சூழலும் பணிப்பொறுப்புக்களும் இந்த நிலையை உருவாக்கின.

அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வழக்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற ஆணை பிறப்பித்தார். அதுமட்டுமா? அரசு பெற்ற அபராதத் தொகையையும் திரும்பக் கொடுக்கும்படி ஆணை பிறப்பித்தார்! வழக்கு நடவடிக்கையைத் திரும்பப்பெற்ற அரசாணை கிடைத்தது. பணமும் கிடைத்தது. அந்தத் தொகையை அண்ணாவின் நினைவாகத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் நிலையான இட்டு வைப்பாக வைக்க நாம் எண்ணினோம். அப்போது நடக்கவில்லை. இப்போது செய்ய வேண்டும். உணர்ச்சி நட்பாங்கிழமை தரும் என்ற திருக்குறள் நினைவுக்கு வரவில்லையா?

1968-ல் உலகத் தமிழ் மாநாட்டு முயற்சி நடந்தது! மாநாடு தொடர்பாக முதல்வர் அறிஞர் அண்ணாவை நாம் சந்தித்தோம்.


12

றிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 1968 ஜனவரியில் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடை பெற்றது. உலகத்தமிழ் மாநாட்டின் போது தமிழறிஞர்களின் சிலைகளை மெரீனா கடற்கரையில் திறப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த நேரத்தில் நாம் நிறுவியுள்ள திருப்புத்துார் தமிழச் சங்கக் கூட்டம் நடந்தது.

திருப்புத்துார் தமிழ்ச் சங்கம் 63 சைவத் தமிழறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. கழகப் புலவர் பா. இராம நாதபிள்ளை, இளவழகனார், பேராசிரியர் அ. சங்கர நாராயணன், பெரும்புலவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை, பெரும்புலவர் சு. வெள்ளைவாரணனார், திருக்குறள் அறிஞர்

கு.XVI.9.