பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

123


கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சே வடியிணையே குறுகி னோமே”

என்ற அப்பர் அடிகளின் திருப்பாடலைக் கூறினார்.

அப்பர் அடிகள் பற்றிய கலந்துரையாடல் நீண்டது. கலைஞர், “அப்பர் அடிகள் சாதிகளையும் எதிர்த்தவர்” என்று சுருதி கூட்டினார். கலந்துரையாடலின் முடிவில் அறிஞர் அண்ணாவிடம் ஒரு தயக்கம் வெளிப்பட்டது. "அப்பர் அடிகள் காட்டிய நெறி தமிழ் மக்களால் குறிப்பாக, சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப் பெற வில்லையே!” என்ற ஆதங்கம் வெளிப்பட்டது! ஏன், வெளிப் படையாகவே, "சைவ மடங்கள், ஆதீனங்கள் கூட அப்பர். அடிகள் நெறியை ஏற்கவில்லையே!” என்று கூறி வருத்தப்பட்டார்.

“நாமார்க்கும் குடியல்லோம்... என்ற அருமையான எழுச்சி நிறைந்த பாடலைத் தந்த அப்பர் அடிகள் சிலை வைப்பதில் எனக்கு எந்தவிதத் தடையும் இல்லை! ஆனால் சிலை வைப்பதை விரும்புகிறீர்களா? திருவுருவம் வைப்பதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். தமிழ்நாட்டில் அப்பர் அடிகள் திருவுருவம் திருக்கோயில்களில் வழிபடும் திருவுருவமாக இடம்பெற்றுள்ளது. பலர் வழிபடும் ஒருவருக்கு மெரீனா கடற்கரையில் சிலை வைப்பது மரபாகாது!. வேண்டாம்! மாநாடு முடிந்தவுடன் சென்னையில் அப்பர் அடிகளுக்குத் தனியே ஒரு மணிமண்டபம் கட்டலாம்; அதில் அப்பர் அடிகள் திருவுருவத்தை அமைக்கலாம். அவருடைய அற்புதமான பாடல்களையும் கல்வெட்டாக அமைக்கலாம். நானே செய்து தருகிறேன்” என்று கூறினார், வாழ்வியல்கள் மாறினாலும், முரண்பாடுகள் அமைந்தாலும் மதிப்பீடுகள் மாறக்கூடாது, தாழக்கூடாது என்ற உண்மையை உணர