பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடிந்தது. இன்று இந்தப் போக்கு நிலைகுலைந்து வருவது வருந்துதலுக்குரியது.

அப்பர் அடிகள்பால் அறிஞர் அண்ணாவுக்கு இருந்த மதிப்பீடு எவ்வளவு என்பதை உணரமுடிந்தது! அந்த எண்ணம் நிறைவேறாமல் காலம் சதி செய்துவிட்டது.

இன்று நாட்டில் பரவலாகக் காணப்பெறுவது கருத்துத் திருடு! கொள்கைத் திருடு! அதாவது, ஒரு கருத்தை ஒருவர் சிந்தித்துத் தெரிவிப்பார். அதே கருத்தை வேறொருவர் தமது கருத்துப் போலச் சொல்லிப் பாராட்டுப் பெறுவார். இப்படி ஒரு வகையினர். பிறிதொரு வகையினர், மற்றவர் சொன்ன கருத்தை மதித்து ஏற்பதில்லை. அவர்களின் கருத்து மட்டுமே அவர்களுக்கு உரியதெனக் கொள்வர். ஆனால், அறிஞர் அண்ணா யாருடைய கருத்தையும் விரும்பி ஏற்பவர்; பாராட்டுபவர். தமிழ்நாட்டில் பாராட்டும் போக்கு மேவியதற்கே காரணம் அறிஞர் அண்ணாதான்! “வளரும் பயிருக்கு மழை போல, வளரும் மனிதனுக்குப் பாராட்டும்" என்பது அறிஞர் அண்ணாவின் கொள்கை! எந்தக் கருத்தை எடுத்துச் சொன்னாலும் எழுதினாலும் அந்தக் கருத்தைச் சொன்ன வரை, எழுதியவரை அறிமுகப்படுத்தாமல் அவர் விடுவதில்லை. அன்றைய சந்திப்பில் அறிஞர் அண்ணாவிடம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு மையம் அமைக்கும்படி கேட்டுக்கொண்டோம் நாம். அதாவது, 'பிரெஞ்சு அகாதமி' போல! இந்தத் தமிழ் மையத்தின் மூலம் தமிழைப் பழமைக்குச் சீர்குலைவில்லாமல் காலத்துக்கு ஏற்ப, புதுமைப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் நாம். இந்த ஆலோசனையை அறிஞர் அண்ணா மகிழ்ச்சியுடன் வரவேற்றார், செய்வதாக உறுதி கூறினார். பின் 'கலைமகள்' இதழுக்கு முதலமைச்சர் அறிஞர் அண்ணா ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் 'தமிழ் மையம்' பற்றி விவரித்து, "இந்த ஆலோசனை