பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

125


குன்றக்குடி அடிகளாருடையது. தமிழ்நாடு அரசு செய்யும்” என்று கூறியிருந்தார். இதுவும் கைகூடவில்லை!

ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கினார். வரவேற்று மகிழத்தக்க பணி இது! ஆனால், தமிழ்ப் பல்கலைக்கழகம்-தமிழின் வளர்ச்சிக் குரியனவாகச் செய்வது மிகவும் குறைவே. இன்று தமிழ்ப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பாதுகாப்புப் பணிதான் அதிகமாகச் செய்து வருகிறது; தமிழ் வளர்ச்சிப் பணி ஓரளவுதான் செய்கிறது. ஆக்கம் தந்தால் செய்யும். அறிவியல் புலம் அமைந்துள்ளது. அறிவியல் சொற்களுக்குத் தமிழாக்கம் செய்துள்ளது. பொறியியலைத் தமிழில் கற்பிக்கப் பாடநூல் தயாரித்துள்ளது. ஆயினும், தமிழ்நாட்டின் தேவை மிகுதி.

தமிழ் நூல்களின் கருத்துக்களை, குறைந்தது ஐந்து மொழிகளிலாவது இலக்கிய ஏடுகளாக வெளியிட வேண்டும். முத்திங்கள் இதழாகக்கூட வெளியிடலாம். இந்தி, ஆங்கிலம், உருது, ருஷ்யன், சீனம் ஆகிய மொழிகளில் வெளியிட வேண்டும். உடனடியாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும். அதுபோல பிற மொழி இலக்கியங்கள் பற்றித் தமிழில் இதழ் நடத்த வேண்டும். இன்றைய வாழ்வு, அறிவியல் சார்ந்த வாழ்வு; தொழில்நுட்பம் சார்ந்த வாழ்வு! தமிழ், அறிவியல் மொழியாக வளர வேண்டும் இந்தப் பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்ப் பல்கலைக்கழகத்தினுடையது, பாவேந்தர் பாரதிதாசன் கூறியதைப் போல், துறைதோறும் தமிழை' வளர்க்க வேண்டும். அறிவியல் துறைதோறும் தமிழில் நூல்கள் வெளியிட வேண்டும். இந்தப் பணிகளை இன்று செய்தால்தான் தமிழன் வளர்வான்! தமிழ் வளரும்! வாழும்! இது எப்போது நடக்கும்?

தமிழ் மக்களேகூட அரசியல் சார்பின்றி இத்தகைய ஒரு பெரிய தமிழ் வளர்ச்சி மையத்தைத் தோற்றுவிக்கலாம். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே ஒரு பல்கலைக்-