பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

127


13

திருக்கடவூர் கைலாசம் பிள்ளை மூலம் குன்றக் குடியிலிருந்து வந்த அழைப்பை மறுத்த பிறகு, அடுத்த வந்த 1948 ஆவணித் திங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் குன்றக்குடி ஆதீனம் மகாகுருபூஜை விழா வந்தது. ஆதீனங்களில் நடை பெறும் குருபூஜை அந்தந்த ஆதீனங்களின் ஸ்தாபகர்கள் பரிபூரணம் எய்திய நாளில் நடைபெறும். இப்படி ஆதீனங்களில் நடைபெறும் குருபூஜைக்கு மற்ற ஆதீனங் களிலிருந்து தம்பிரான்கள் பிரதிநிதிகளாகச் செல்வது வழக்கம். இது ஒரு சம்பிரதாயமான நடைமுறையே! இதனால் விளையும் பயன் என்ன? கேள்விக்குறியே! ஆயினும் நடைமுறையில் ஓர் உறவு பேணப்பட்டு வருவது மதித்தற்குரிய செய்தி!

குன்றக்குடி ஆதீன குருபூஜைக்குச் செல்ல கந்தசாமித் தம்பிரானுக்கு (குன்றக்குடி அடிகளார்) திருவுள்ளச் சீட்டு விழுந்தது. செய்தி, கந்தசாமித் தம்பிரானுக்கு அதிர்ச்சியைத் தந்தது. கைலாசம் பிள்ளையின் முயற்சியை நினைவு கூர்ந்தார்! குன்றக்குடியில் நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது? குரு பூஜைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் இயலாது!

"கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ ?” என்னும் திருஞானசம்பந்தர் அருளிய அடிகள் நினைவுக்கு வந்தன. எருது விருப்பத்தின்படியா சுமை ஏற்றப் படுகிறது! இல்லையே! அதுபோல மற்றவர் விருப்பத்தை; வசதியைக் கேட்பார் யார்? வேறு வழியில்லை. அப்போது தருமபுர ஆதீனத்தில் சம்பந்த ஓதுவார் என்ற ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். மருத்துக்குக்கூட வினயம் இல்லாதவர். கந்தசாமித் தம்பிரானுடைய உயிர்ப்புள்ள விளையாட்டுப் பொருளில் இவரும் ஒருவர். இவர்தான் பெரும்பாலும் தம்பிரான்களுடன் மற்ற ஆதீன