பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

129


என்ற நினைப்பில் தொடங்கிப் பேசினார். பத்து நிமிடங்களில் முடித்துவிட்டார் ஆயினும் அந்த அவையினர் பேச்சைப் பாராட்டினர்.

குன்றக்குடி ஆதீனம் மகாசந்நிதானம் அவர்கள் "நன்றாக இருந்தது?” என்று ஆசி கூறி ஒரு ஆரஞ்சுப் பழமும் பத்து ரூபாய் திருக்கைவழக்கமும் தந்தருளினார்கள்.

குன்றக்குடி ஆதீனத்தில் நாராயணசாமி ஐயர் என்பவர் ஏஜெண்டாக இருந்தார். அவரும் கனகசபை பிள்ளையும் காரைக்குடி சோமசுந்தரம் பிள்ளையும் மகா சந்நிதானம் அவர்களும் ஏதோ பேசுகிறார்கள் என்பது தெரிகிறது. வழக்கமாகத் தம்பிரான்களுக்கு நடைபெறும் உடசாரத்தைவிட உபசாரம் கூடுதலாக இருந்தது. 'கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும்' செய்தி நினைவுக்கு வருகிறது. கடைசியாக ஒரு செய்தி! குன்றக்குடி ஆதீன மகாசந்நிதானம் அவர்களிடமிருந்து "இரண்டு நாட்கள் தங்கி ஆதீனத் திருக்கோயில்களாகிய திருப்புத்தூர், பிரான்மலைத் திருக்கோயில்கள் வழிபாடு செய்து விட்டுப் போகலாம்” என்று உத்தரவு ஆனது. என்ன செய்வது? திகைப்புத்தான் வந்தது. ஒருவாறு இசைந்து மறுநாள் காலை திருப்புத்தூர் திருக்கோயில் வழிபாடு நடந்தது. ஏஜெண்ட் நாராயணசாமி ஐயர் கூடவே வருகிறார். மாலையில் பிரான்மலை! பிரான் மலையில் அப்போது கோபாலன் என்று ஒரு நாயனக்காரர் இருந்தார். முன்பே பழகினவர்போல மேவிபழகினார். மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். இரவு பிரான்மலையில் தங்கல்! பிரான்மலையில் பாண்டிய நாட்டுக் குருக்கள் மடம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மடம் அருவியூர் நகரத்தார்க்கு குருமடம். அருவியூர் நகரத்தார் பூம்புகாரிலிருந்து வந்து குடியேறியவர்கள். கோவலன் மரபினர் என்பது வரலாறு. நல்ல மரபினர். பொருளீட்டி வாழ்வாங்கு வாழ்ந்து . பழகியவர்கள். இவர்கள் சமூகம் கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக வளர்ந்து வருகிறது. அப்போது இந்த மடத்தின்