பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

131


பூஜையில் நடந்தவையெல்லாம் விண்ணப்பிக்கப் பெற்றன, "ஏன் தாமதம்?”-இது மகாசந்நிதானம் அவர்களின் வினா. சம்பந்த ஓதுவார் பதில் சொன்னார்; “பாண்டிப்பதி பதினான்கில் திருப்புத்தூர், பிரான்மலை வழிபாடு செய்து கொண்டு வந்ததால் தாமதம்” என்றார். குன்றக்குடி ஆதீனத்தைப் பற்றியும் பேச்சு வந்தது. அப்போது குன்றக்குடி மடம் செல்வ ஆதாரத்தில் வளமாக இல்லை. குன்றக்குடி ஆதீனத்தில் தகர வாளிகள் தகர குவளைகள் புழக்கம். இது குறித்து தருமபுர ஆதீன அலுவலர்கள் 'தகர குவளை மடம்' என்றார்கள். இந்த வார்த்தை கந்தசாமித் தம்பிரான் நெஞ்சில் 'சுருக்'கென்று தைத்தது!

திருமடங்களுக்குள்ளேயும் துறவிகளுக்கிடையேயும் வளத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் எண்ணப்படுகின்றன. அவ்வெண்ணத்தின் வழி மதிப்பீடு குறைகிறது. இது ஏற்க முடியாத ஒன்று. நயத்தக்க நாகரிகம் எப்போது மலரும்? எங்கு மலரும்? திருக்கோயில்கள்-திருமடங்கள் கூட இன்று பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பின் காரணமாக வெகுவாக அவற்றின் அகநிலை அறநெறிகள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த நிலை ஆழ்ந்த கவலைக்குரியது.

கந்தசாமி தம்பிரானுக்கு சீகாழி சட்டநாதசுவாமி திருக்கோயில் கட்டளையும் சேர்த்துப் பார்க்கும்படி உத்திரவாகியது. புலவர் இரண்டாம் ஆண்டுப் படிப்பு வேறு. திருக்கடவூர் கட்டளை, சீகாழி கட்டளைகளும் சேர்ந்தன, சமயப்பணிகள் அதாவது, குருமூர்த்தங்கள் வழிபாடு, திருக்கோயில் வழிபாடு ஆகியனவும் வந்துவிடும்.

இந்தக் காலங்களில் பெரும்பாலும் மாலை நேரத்தில் காவிரிக் கரையில் அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான் (இன்றைய தருமபுர ஆதீனம் மகாசந்நிதானமாக எழுந்தருளி யிருப்பவர்கள்) அவர்களுடன் இலக்கிய விவாதங்கள், பொது சர்ச்சைகள் நிகழும். எல்லா விவாதங்களிலும் சர்ச்சை