பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆன்மாக்களின் அறியாமைக்கு 'ஆணவமலம்' என்று பெயர். திருஞானசம்பந்தரின் திருக்கோயிலில் நான்கு கால் பசுக்களின் மலமாகிய சாணம் கதிரொளியில் பக்குவப் பட்டுக் கொண்டு கிடந்தது. திருஞானசம்பந்தர் திரு அவதாரம் மனிதர்களின் மேம்பாட்டுக்கு அல்லவா!

திருஞானசம்பந்தர் கோயிலில் வைக்கோல் போர்! தட்டுமுட்டுச் சாமான்கள்! திருக்கோயிலில் செடிகள் முளைத் திருந்தன! தூய்மையில்லை! கந்தசாமித் தம்பிரானுக்குத் தாங்கொணாத் துயரம்! நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் திருக்கோயில் அல்லவா இது!

உடனே ஐயங்கார் அழைக்கப்பட்டார்! ஆட்கள் அழைக்கப்பட்டனர்! தூய்மை செய்யும் பணி தொடங்கப் பட்டன. மாடுகள் கட்டுவதற்குத் தனியே பசுமடம் அமைக்க வேண்டும். வைக்கோல்போரும் குப்பைக் குழியும் பசு மடத்திலேயே அமைக்க வேண்டும். திருஞானசம்பந்தர் திருக் கோயில் எப்போதும் தூய்மைப் பொலிவுடன் அமைய வேண்டும். திருக்கோயில் 'குடவரை'க் காவல் நியமனம் செய்து எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்பது திட்டம், இந்தத் திட்டத்துடன் மகாசந்நிதானத்துக்கு விண்ணப்பங்கள் தயாரித்து சீனிவாச ஐயங்கார் அன்று இரவு பத்து மணிக்குக் கொடுத்தார். இவற்றை வாங்கிக்கொண்டு உடனே கந்தசாமித் தம்பிரான் தருமபுரத்துக்குப் பயணமானார்.

மறுநாள் காலை தருமபுரம் பூஜை மடத்தில் வழிபாடு செய்துகொண்டு மகாசந்நிதானத்தை வணங்கி, திருஞான சம்பந்தர் கோயில் பற்றி விண்ணப்பித்துக் கொண்டார்; உடனே சீர் செய்தலுக்குரிய திட்டங்களுடன் கூடிய விண்ணப்பங்களைத் திருக்கண் பார்வைக்கு வைத்தார் கந்தசாமித் தம்பிரான்! மகாசந்நிதானம் விண்ணப்பங்களைக் கண்ணுறும் போதே, மகாசந்நிதானத்துக்கு வருத்தம் கலந்த நிலையில் திருப்பணியில் ஆர்வம் பொங்கியெழுவதை