4
இருந்தவர் அடிமைத்திறம் பூண்டவர் உன்ன உன்ன இப்பாடலொடும் அடிகளாரொடும் ஒன்றித் திளைப்பர் என்பது உறுதியாம்.
இத்தொகுதியில் மேலும் நான்கு பகுதிகளும் பின் இணைப்பும் உள.
3. மண்ணும் மனிதர்களும்
4. அடிகளார் உவமைநயம்
5. எங்கே போகிறோம்?
என்பவை அப்பகுதிகள் (17-442). பின்னிணைப் பாவது (443-545) “அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்” என்பது.
“சமய அடிப்படையில் மனித குலம் ஒருமைப் பாட்டைக் காண்பதும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய பொதுமை நலம் மிக்க சமுதாயத்தைக் காண்பதுமே நமது விருப்பம்” (26)
“தமிழகத் திருமடங்கள் இணைந்து செயல்பட வேண்டும்” (27)
“பிறப்பில் வேறுபாடு இன்றி ஆனைவர்க்கும் பயிற்சி கொடுத்து அனைவரையும் அர்ச்சக ராக்குவது” (28-29) - என்பவை நடந்ததும் நடக்க வேண்டியதுமாகிய இரண்டாம் கட்டுரையில் இடம் பெற்றவை. இவை அன்றையிலும் இன்றை மிகத் தேவையானவை.
“தெய்வீகப் பேரவையில் தமிழர் மடாதிபதிகள் பலர் இருக்கிறீர்கள். நாங்கள் பார்ப்பனர் ஓரிருவர் தாம் இருக்கிறோம். அத்னால் உங்கள் கருத்து அரசாங்கத்தின் கருத்தாகிவிடுமே” என்று, பிறப்பால் வேறுபாடு காட்டித் தமிழரைப் பிரித்த கூட்டம். எந்நாளும் தமிழரைப் பிரித்து வைக்கவே எண்ணிப் பேரவையில் இருந்து ஒதுங்கிக் கொண்ட வரலாறு. “அவர்கள் என்றும் அவர்கள் தாம்”; சாதிச் சங்கமாக வைத்துக் கொண்டு சமய உலாக் கொள்ளும் சமர்த்தர்கள்!” என்பது வெளிப்படை. அதுமட்டுமன்று: “அரசியலில் கால் வைக்க மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டேஉள்ளரசியல் நடத்துபவர் என்பதும் ஆளுநர் அறிக்கையால் விளக்கமாகும். என்ன பட்டும் என்ன சொல்லியும் என்ன? தமிழர் விழிப்புறத் தட்டி எழுப்பும் தடியாக என்று தான் அமையுமோ என்பது இன்றும் விளக்க மாகாமலே உள்ளது (31-32)
“குன்றக்குடியைப் போல நூற்றுக் கணக்கான கிராமங்களைத் தன்னிறைவுடைய கிராமங்களாக நாடு முழுதும் காண வேண்டும். நாட்டை நலிவுறச் செய்யும் வறுமையை எதிர்த்துப் போராடுவதே இனி நமது வாழ்நாட்பணி! சாதி மதச் சண்டைகளால் சமூக உறவுகள் பாதிக்கப்பட்டுக் கிராமங்கள் ஒளி இழந்து போகாமல் பாதுகாத்து வள்ர்ப்பதே நம்பணி!” என்னும் அடிகள் குறிக்கோள் வென்றெடுக்கிக் கடனாற்றல் வழிமுறையர்க்கு வாய்க்கும் பேறல்லவா (34-35).
விபுலானந்த அடிகள் யாழ்நூல் கொடையைப் பலரும் அறிவர். ஆனால் அவர் சேரிக்குச் சென்று கல்வித் தொண்டு செய்ததும், தீண்டாமை விலக்குக்குப் பாடுபட்டதும் தமிழ்த் துறவியர் நெஞ்சில் பதித்துக் கொள்ள வேண்டியவை அல்லவா! அடிகள் எடுத்துத் தந்த