பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சிகாமணி அருணாசலத் தேசிகர் என்ற தீட்சாநாமத்துடன் சின்னப்பட்டமானார். ஆதீன மடங்களின் மரபுப்படி, ஆதீனக் குருமுதல்வர் பெயர் முதற்பெயராகவும், தமது ஆசிரியர் வைக்கும் தீட்சாநாமம் இரண்டாவது பெயராகவும் நின்று விளங்கும்.

குன்றக்குடி ஆதீனம் திருவண்ணாமலையில் நிறுவப் பெற்றது திருவண்ணாமலை ஆதீனக் குருமுதல்வர், திருவண்ணாமலைத் திருக்கோயிலின் முதன்மைச் சிவாச் சாரியாராக இருந்த தெய்வசிகாமணி அவர்கள். இல்லறவாசி. ஆகமஞானம் கைவரப்பெற்றவர். காலப் போக்கில் இந்த ஆதீனம் சைவவேளாளர் கைக்கு மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் சாதி உணர்வுகள் நெகிழ்ந்து கொடுப்பனவாகவும் மாற்றத்துக்குரியனவாகவும் இருந்துள்ளன என்பது ஒரு சிறந்த உண்மை. காலம் செல்லச் செல்ல இந்தச் சமய நிறுவனங்கள் சாதிமுறையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து விட்டன என்ற வருந்தத்தக்க உண்மையைச் சொல்ல, ஏற்க வெட்கப்பட வேண்டிய நிலை. மிகவும் பிற்காலத்தில்தான் குன்றக்குடி ஆதீனம் துறவு நெறிக்கு மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். குன்றக்குடி ஆதீனகர்த்தர் பூணுரல் அணிய வேண்டும். நாள்தோறும் நித்யாக்கினி வளர்க்க வேண்டும். இந்த நடைமுறை இன்றும் இருக்கிறது.

திருவண்ணாமலைத் திருக்கோயில் சுவரில் குரு முதல்வர் திருமேனி, அண்ணாமலையாரை வணங்கிய நிலையில் இருக்கிறது. ஆதிகுருமுதல்வர் சகலாகமப் பண்டிதராக விளங்கிய அருணந்தி சிவாச்சாரியாரின் மாணாக்கர். வல்லாள மகாராஜாவுக்கும் ஆதிகுரு முதல்வருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

குன்றக்குடி ஆதீனத்தின் கிளை மடங்கள் தமிழ்நாடு முழுதும் பரவியுள்ளன. திருவண்ணாமலை ஆதீனச் சொத்துக்கள் செங்கற்பட்டு, சென்னை மாவட்டங்களில்