பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

149


அக்காலத்தில் விழுதுவிட்டுத் தழைத்திருந்தன. ஆதீனகுரு முதல்வரின் ஜீவசமாதி திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் திருக்கோயிலாகக் கற்றளியாக அமைந்துள்ளது. ரமண மகரிஷி இந்த ஆதிகுருமுதல்வர் சந்நிதியில் பல ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார். இன்றும் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

கி.பி. 1680-1700 பட்டத்தில் இருத்தவர் நாகலிங்கத் தேசிகர். இவர் ராமேசுவரம் யாத்திரை வந்த இடத்தில் அப்போது ராமநாதபுரம் மன்னர் ரகுநாதசேதுபதி, குரு மூர்த்தியை இந்தப் பகுதியிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டார். குருமூர்த்தி முற்றாக இசையவில்லை. ஆயினும், சேதுபதி மன்னர் வழங்கும் அறப்பணிக்காகத் தக்காரை வைத்து நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டார். அப்போதுதான் பிரான்மலை வகைத் திருக்கோயில்கள் ஐந்து பிரான்மலை (சதுர்வேதமங்கலம்), திருப்புத்துரர், குன்றக்குடி, திருக்கோளக்குடி, தேனாட்சியம்மன்கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. தலைமையகம் பிரான்மலையில் அமைந்தது. தம்பிரான்களை வைத்துத் திருக்கோயில் நிர்வாகம் நடந்தது. பின், கி.பி. 1790-1800 ஆண்டுகளில் ஆதீனத் தலைமையகம் படிப்படியாகக் குன்றக்குடிக்கு மாறியது.

தமிழ்நாட்டின் திருக்கயிலாயப் பரம்பரை ஆதீனத் திருமடங்களில் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனமும் ஒன்று. செந்தமிழுக்கும் சிவாகம நெறிக்கும் தொண்டு செய்த ஆதீனம் இது. நல்ல நிர்வாகிகள் பலர் இருந்து ஆதீனத்தை வளர்த்து வந்துள்ளனர். ஆயினும், கி.பி. 1905-1928 ஆண்டளவில் வேண்டாத வம்புகளை விலைக்கு வாங்கியதாலும், தியாகம்-தொண்டு என்பதற்குப் பதிலாக மடாதிபதி என்பது ஒரு பதவி என்ற மனப்போக்கு வளர்ந்ததாலும் ஆதீனம் அல்லல்பட்டதை எண்ணி வருந்தாமலிருக்க முடியாது. இந்தச் சூழ்நிலையிலும் நல்ல நிர்வாகத் திறனும், சமூக மனப்பான்மையும், புலமையும்