பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

155


செய்ததற்காக நடந்த பாராட்டு விழா! இந்த மேடை மடத்தின் பகுதியில் அமைந்தது. கிராமங்களில் அறிமுக மாகத் துணை செய்தது. மூன்றாவது, காரைக்குடி கம்பன் விழா-நாட்டரசன் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 'புதரிடை மலர்' என்ற தலைப்பில் திரிசடையைப் பற்றிய பேச்சு, நான்காவது ராமநாதபுரத்தில் நடந்த சைவசித்தாந்த சமாஜ மாநாட்டில் இளைஞர் மாநாட்டுக்குத் தலைமையேற்று நிகழ்த்திய உரை.

ஐந்தாவது, கூத்தளூர் கிறித்துவ தேவாலயத்தில் நடந்த 'கடவுள் தின' விழாப் பேச்சு. இந்த விழாவை அப்போதைய கூத்தளூர் பங்குத் தந்தை அருள்மிகு பால்ராஜ் ஏற்பாடு செய்தார். இந்த விழாவில் திருச்சி ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். நாம் தலைமை. நமது தலைமையுரையில் ரோமன் ரோலண்டு, அண்ணல் காந்தியடிகளைப் பாராட்டிய மொழிகளை-அதாவது 'நான் இயேசுவை நினைக்கும்போது காந்தியடிகளை நினைக்கிறேன்' என்று சொன்ன வாசகத்தை எடுத்துக் காட்டிப் பேசினோம். இயேசுவை, காந்தியடிகளுடன் ஒப்பிட்டது பேராசிரியர் சீனி வாசனுக்குப் பிடிக்கவில்லை. மறுத்துப் பேசினார். மறுத்துப் பேசியதுடன் இந்து சமயக் கோட்பாடுகளைக் குறைத்தும் பேசினார். நமது நிலை இடர்பாட்டுக்குரியதாயிற்று. நாம் முடிவுரையில் வன்மையாக மறுத்துப் பேசினோம். இளமைக் காலம். ஆதலால் ஆவேசமான பேச்சு! அதோடு சைவத்தின் மேல் உள்ள ஈடுபாட்டினால் அழுதுவிட்டோம்! அவையில் இருந்த இந்து மக்களிடம் நமது பேச்சுக்கு நல்ல வரவேற்பு! நிகழ்ச்சி முடிந்ததும் பயணமானோம்! விழா அமைப் பாளர்கள் மாலையிலும் இருக்கும்படி கேட்டுக்கொண் டார்கள். முதலில் இருந்த திட்டமும் அதுதான்! நாம் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்ததோம்! இந்து மக்கள் சாரை சாரையாக வந்து பாராட்டியும் வணங்கியும் திருநீறு பெற்றும் சென்றனர். இது ஒரு நல்ல அறிமுகமாயிற்று.