பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாலை 3.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவேண்டும். மதியம் 2 மணிக்கு எதிர்பாராமல் பெரும் மழை பெய்யத் தொடங்கியது. மாலை நிகழ்ச்சி நடத்த இயலவில்லை. மக்கள் மத்தியில் "அடிகளார் மனத்தைத் துன்புறுத்திவிட்டனர். பாவம். அழுதார்! அதனால் கூட்டம் நடத்த திருவருள் அனுமதிக்கவில்லை" என்று பரவலாகப் பேசிக்கொண்டனர். ஆனால், இது உண்மையல்ல, விழாவை நடத்திய பங்குத் தந்தை மற்றும் கிறித்துவப் பெரியார்கள் பேராசிரியர் சீனிவாசனின் பேச்சை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, நம்மிடம் தங்களுடைய நல்லெண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். சொல்லப்போனால் அன்றுதான் கிறித்துவத்தைப் பற்றிய மதிப்பீடு நம் வாழ்க்கையில் தொடங்கியது. சமய சமரச உணர்வுகளுக்குக் கால்கோள் செய்ததே கூத்தளுர் விழாதான்.

'ஒர் ஆட்சிக்கு பின்வரும் ஆட்சிக்கும் உள்ள இடைவெளி அவ்வளவு சிறப்பாக அமையாது' என்று இலக்கியங்கள் கூறும். ஆதீனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் பெரிய பட்டம் சின்னப் பட்டம் என்ற அமைப்பின் ஆயுள் நீடிப்பது நல்லதல்ல நாம் 33 மாதம் சின்னப் பட்டமாக இருந்தோம். முதல் ஆறு மாதங்கள் சிக்கலின்றி ஓடியது. மெள்ள மெள்ள வாடகைதாரர்கள். குத்தகைதாரர்கள் நம்மைப் பார்க்கத் தலைப்பட்டனர். இது ஆதீனம், திருக்கோயில் அலுவலகங்களில் வேலை பார்த்தவர்களுக்குப் பிடிக்க வில்லை; ஏன்? எதனால் உய்த்துணர்க!.

நமது நாட்டில் கையூட்டு (லஞ்சம்) தோன்றிப் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அது சிரஞ்சீவித்தன்மை வரமும் பெற்றிருக்கும் போலும்! இந்தத் தலைமுறையில் நாம் செய்திருப்பதெல்லாம் கையூட்டை (லஞ்சத்தை) தேசிய மயமாக்கி இருப்பதுதான்! மாமூல் பாதிக்கும் என்று அஞ்சியவர்கள் கோள் சொல்ல ஆரம்பித்தார்கள். 1950-தைப் பூசம்! திருவண்ணாமலை சமயச் சொற்பொழிவுக்கு நாம்