பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

163


என்று கேட்டார்கள். "சைக்கிளில்” என்றார் ஏவலர் நடேசன். மகா சந்நிதானம் மிகவும் வருந்தினார்கள்; சலுகைக் கோபத்தையும் காட்டினார்கள். காரை எடுத்துக் கொண்டு போகும்படியும், கார் குன்றக்குடியிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு போட்டார்கள். அதோடு 'காரை அநாவசியமாக எடுக்க வேண்டாம்; பிரசங்கத்துக்கெல்லாம் போக வேண்டாம்” என்றும் சொன்னார்கள். அந்த உத்தரவைப் பின்பற்றினோம்.

மகாசந்நிதானத்துக்குக் குணமாகவில்லை. எனவே, மடத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். குன்றக்குடிக்கு வந்தவுடன் மகாசந்நிதானம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பெற்றது. தருமபுர ஆதீனம் கச்சேரியில் நாம் அரங்கநாதனாக வேலை பார்த்த காலத்தில் தருமபுர ஆதீனம் 24-வது மகாசந்நிதானம், திருமேனி நலம் குன்றியிருந்தார்கள். அதுபோது இவ்வாறான சுழற்சி முறைதான் அனுசரிக்கப் பெற்றது. அந்தச் சுழற்சி முறைப்பணியில் அரங்கநாதனைச் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும் அன்று அரங்க நாதன் போராடி அந்த உரிமையைக் கேட்டு வாங்கினான். ஆனால், இங்கு ஆர்வத்தோடு சிலர்தான் வந்தனர். ஆயினும் வழங்கிய பணியை எல்லோரும் ஏற்றுக்கொண்டு செய்தனர். நாட்கள் மாதங்களாகி உருண்டோடிக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் சேலம் குகையில் உள்ள திருக்குறட் கழகப் பொன்விழா நிகழ்ச்சிக்கு நாம் அழைக்கப் பெற்றிருந் தோம்! திருக்குறள் ஆர்வம், பொன்விழாவில் பங்குகொள்ள விருப்பம். ஆனால், மகாசந்நிதானத்தின் திருமேனி நிலை. இந்த இரண்டையும் எண்ணி அறச்சங்கட நிலையில் தவித்தோம்! நோய்வாய்ப்பட்டுப் பல திங்கள் படுத்தாலே சுற்றிலும் இருப்பவர்களுக்கு உள்ள சிரத்தை குறையும். பொன்விழாவில் கலந்துகொள்ளும் ஆர்வமே நமக்குத் தலைதுாக்கியது! ஆயினும் மகாசந்நிதானத்தின் உத்தரவு