பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

165



தனியே அழைத்து, "விசாரித்தார்களா?” என்று கேட்டோம்! அவர் கூறிய "இல்லை" என்ற பதில் மூச்சுவிடத் துணை செய்தது.

நீண்ட நெடுநாட்களாகக் காலை மூன்று மணி முதல் பணி தொடங்கிச் செய்வது நமது வழக்கம். எனவே, மடத்தின் தளத்துக்கு வ்ந்து ஒய்வு நாற்காலியில் சற்று நேரம் ஒய்வு எடுத்தோம். பின்பு நீராடிவிட்டுப் பூஜை மடத்தில் பூஜை முடித்து வந்தோம். அப்போது மகாசந்நிதானம் அழைப்பதாக சித. பேச்சிமுத்தன் வந்து அழைத்தார். உடனே விரைந்து சென்று அணுகியபோது சரியான சூழல் இல்லை! பருகுவதற்கு ஹார்லிக்ஸ் கொடுத்தோம். உணர்வு திரும்பியது. அருகில் இருக்கச் சொன்னார்கள். கையைத் தூக்கி வாழ்த்தினார்கள். "நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நமது மடம் கஷ்டப்பட்டது; சிக்கனமாக இருக்கவேண்டும்!” என்றார்கள்! பரிபூரணம் அடைந்துவிட்டார்கள்!

மகாசந்நிதானம் அழைத்த நேரத்தில் இருந்தது. திரு வருட்செயல்! அடிமனத்தின் ஆழத்தில் இருந்த தார்மீகப் பொறுப்பு உணர்வின் வெற்றி! உழுவலன்பு தந்த பயன்!

20

நாம் சின்னப் பட்டமாக இருக்கும் போது குன்றக்குடியில் தமிழ் விழா ஒன்று மகாசந்நிதானத்தின் இசைவு பெற்றே நடந்தது. தமிழ் விழா என்றால் சாதாரண விழா அல்ல. அது ஒரு பெரிய விழா. செட்டிநாட்டரசர் மு.அ. முத்தையா செட்டியார் அவர்கள் விழாவுக்குத் தலைமை. செட்டிநாட்டு அரசரின் - அந்தக் குடும்பத்தினரின் வண்மை நிறைந்த அரண் ஆதீனத்துக்கு என்றும் தேவை என்ற அடிப்படையில் செட்டிநாட்டரசர் விழாவுக்கு அழைக்கப்பட்டார். செட்டிநாட்டரசர் மு.அ. முத்தையா செட்டியார் நம் மீதும் நமது ஆதீனத்தின் மீதும் தனிக் கவனம் செலுத்தி