பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திசையில் நாடு நகரும். தமிழ் அர்ச்சனையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ற நிலை உருவானது. இதற்கிடையில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாவலர் இரா. நெடுஞ்செழியன் போன்றவர்களும் தமிழ் அர்ச்சனை விவாதத்தில் பங்கேற்றனர். வணக்தத்துக்குரிய அகோபில மடம் ஜியர் தமிழ் அர்ச்சனையை எதிர்த்தார்கள். வடமொழி மட்டுமே அர்ச்சனை மொழி என்றார்கள். நாம் இல்லை, தென் தமிழும் அர்ச்சனைக்குரியது என்று வாதாடினோம். ஆனால், வடமொழியில் அர்ச்சனை செய்வதை மறுக்கவில்லை.

ஏன் வடமொழி அர்ச்சனையை மறுக்கவில்லை? நமது போற்றுதலுக்குரிய அப்பரடிகளே, வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ என்று பாடியுள்ளார். வடமொழியும் நாயன்மார்களால் அங்கீகரிக்கப் பெற்ற ஒரு மொழியே! அதுமட்டுமல்ல, கடவுள் ஒருவர். உலகத்துக்கு ஒரேயொரு கடவுள்தான்! அந்தக் கடவுளைமொழி, இனம், மதம் எல்லைகளைக் கடந்த கடவுளை-மொழி என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் அமைப்பது தவறு-குற்றம், என்பது நமது கருத்து. நாவலர் தமது மன்றம் இதழில் "அகோபில மடத்துக்கு உள்ள துணிவு அடிகளாருக்கு இல்லையே! என்று எழுதினார். தவறுகள் செய்வதற்கு தைரியம் இல்லாதிருப்பது நல்லதுதானே!

நாளும் தமிழ் அர்ச்சனை இயக்கம் வளர்ந்தது. திருக் கோயில்களில் திருமுறை விண்ணப்பிப்பது. கட்டாயமா யிற்று! இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலம் தமிழ் அர்ச்சனை கோருபவர்கள் பண்பா டில்லாதவர்கள் என்று சாடினார், பரமக்குடியில் பேசிய ஒரு கூட்டத்தில்! இந்தப் பேச்சு மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டிவிட்டது. அருள்நெறித் திருக்கூட்டத்தினர் கண்டனம் செய்யத் தொடங்கினர். தந்திகள் பறந்தன. நாம் எல்லோரையும் அமைதிப்படுத்தினோம். முதலமைச்சரை நேரடியாக அணுக முயற்சி செய்தோம்!