பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை, சிலை உடைப்புக் கொள்கையை எதிர்த்துப் போராட தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம் 1952-ல் தொடங்கப் பெற்றது. நமக்குத் தலைவர் பொறுப்பு தந்தனர். மாநிலச் செயலாளர்களாக கம்பன் அடிப்பொடி சா.கணேசன், ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் இருவரும் பொறுப்பேற்றனர். பொருளாளராக தேவகோட்டை உராம.மெ.சுப.சேவு.மெ. மெய்யப்பச் செட்டியார் பொறுப்பேற்றார். மாநிலம் தழுவிய இயக்கமாக வளர்ந்தது. இந்த இயக்கம் பெரியாரின் கோயில் சிலை உடைப்புக் கொள்கையைக் கடுமையாக விமரிசித்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சமயப் பரப்புக்கென இயக்க அமைப்பில் தோன்றியது அருள்நெறித் திருக் கூட்டம் ஒன்றே யாம். இந்த இயக்கம் ஆதீனங்களின் வாழ்த்துகளைப் பெற்ற இயக்கம்.

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் தமிழிலக்கியங்களில் மட்டுமின்றி சிற்ப சாத்திரத்திலும் நல்ல அறிஞர்; ஆதாரங்களுடன் பேசினார். ஈரோடு எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் வல்லமை யுடையவர். எனவே ஆங்கில மேற்கொள்களுடன் கடுமையாகப் பேசினார். மற்றும் பன் மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், இலக்கிய மேதை அ.ச. ஞானசம்பந்தன், கு. அருணாசலக் கவுண்டர் போன்ற பல அறிஞர்கள் அருள் நெறித் திருக்கூட்ட மேடைகளில் பேசினார்கள்.

பெரியார், விநாயகர் சிலை செய்து உடைப்பதாகக் கூறினார். அருள்நெறித் திருக்கூட்டத்தினர் அமைதி பெற்றனர். பக்தர்கள், சிலையில் கடவுள் இருப்பதாக நம்பி வழிபாடு செய்கின்றனர். பெரியாரும் அங்ங்னமே நம்பி உடைக்கின்றார். அருள்நெறித் திருக்கூட்டத்தின் பிரசார வேகத்தினால் ஆங்காங்கு மோதல்களும் வந்தன. திருவில்லிப் புத்துர் மம்சாபுரத்தில் நாம் பேசினோம். சரமாரியாகக் கல்