பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காலங்கள் தோறும் தோன்றிய மதத் தலைவர்கள், சிந்தனை யாளர்கள் கருத்துக்களை குறிப்பாக எம்பெருமானார் ராமானுஜர், அப்பரடிகள், வள்ளல் ராமலிங்கர் கொள்கைகள் பின்பற்றப்பட்டிருந்தாலும் பெரியாரின் வரவைத் தவிர்த்திருக்கலாம்.

"சமயம், கடவுள் எல்லாம் தீண்டாமையை ஒழிக்க வில்லையே...? மனிதனை மனிதனாக்கவில்லையே? ஜாதிகளை அகற்றவில்லையே? கடவுள் சாமி என்றெல்லாம் வாழும் மக்கள் இழிவிலும் வறுமையிலும் கிடந்து உழல்கிறார்களே! இதற்குப் பரிகாரம் இதுவரையில் மதங்கள் தேடவில்லையே. கடவுளும் தேடவில்லையே. அதுமட்டு மல்ல. கடவுள் பெயரால்தானே இந்த அவலமான காரியங்கள் செய்யப்படுகின்றன? என்றார் பெரியார். இதற்கு நாம் சொன்ன பதில்: "இவற்றைக் கடவுள் செய்யவில்லை!" என்பது. "அப்படியானால் இந்த அநியாயத்தைக் கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை?” என்றார் பெரியார்.

என்ன பதில் சொல்வது? நம்முடைய தத்துவங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். கணியன்பூங்குன்றன் காலத்திலிருந்து கண்ணதாசன் காலம்வரை தோன்றிய எந்த சிந்தனையும் செயலுருவம் பெற்றதில்லை. மக்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காகவே இறைவன் சில திருவிளையாடல்களை நடத்தினான், ஆனால் மக்கள் அதையும் பின்பற்றத் தயாராக இல்லை. இன்று சமய ஆசாரங்களைப் பின்பற்றுகின்றனர். கடவுளைத் திருப்திப்படுத்தலாம் என்று எண்ணி ஆரவாரமாக வழிபாடுகள் செய்கின்றனர். ஆனால், சமயநெறி காட்டிய வழியில் மனித நேயத்தை ஏற்று ஒழுகுபவர்கள் எத்தனை பேர்?

பேச்சின் முடிவு: பெரியார், "எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? அவரை நான் பார்த்ததுகூட இல்லை.