பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

191


மரபு என்றும் கூறினார். நாமும் பெரியாரும் கலந்துகொண்ட எந்தவொரு மேடையிலும் பெரியார் மறந்தும்கூட மரபுகளை மீறியதில்லை. பெரியார் ஒரு மணி நேரம் பேசினார். மக்களிடம் அதற்கு வரவேற்பு: பின் நாம் நமது உரையில் பெரியாரின் ஐயங்களுக்கு விடை கூறினோம். இதற்கும் மக்களிடம் வரவேற்பு! இன்று நாட்டில் ஒரே ஒரு குறை - நமது மக்களை நாம் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது தான்.

சேலம் மாவட்டம் நாகரசம்பட்டியில் பெரியாரைப் பின்பற்றும் குடும்பங்கள் பல உண்டு. நாகரசம்பட்டி சம்பந்தன் தீவிர திராவிடர் கழகப் பற்றாளர். நாமும் பெரியாரும் ஒரு விழாவுக்குப் போயிருந்தோம். மேடையில் நினைவுக் கையெழுத்து (Autograph) வாங்கும் கூட்டம் படையெடுத்தது. ஒரு கையெழுத்துக்கு ஒரு ரூபாய் என்று பெரியார் வாங்கினார். நாம் பணம் வாங்காமலே கையெழுத்துப் போட்டுத் தந்ததைக் கண்ட பெரியார், "காசு வாங்குங்கள். காசு வாங்காமல் கையெழுத்துப் போடாதீர்கள்” என்று சொன்னார். ஆயினும் உடனடியாக நாம் காசு கேட்க வில்லை. மீண்டும் பார்த்துவிட்டுக் காசு வாங்கும்படி வற்புறுத்தினார். நாமும் காசு கேட்டு வாங்கினோம். கையெழுத்துப் போட்டு முடிந்தவுடன் எண்ணிப் பார்த்ததில் 157 ரூபாய் இருந்தது. இந்த ரூபாயை இனிய நண்பர். கி. வீரமணி இன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) கேட்டார்: "உங்களுக்குத்தான் காசு வாங்குவதில் விருப்பம் இல்லையே. பெரியாருக்குக் கொடுத்து விடுங்கள்!” என்றார். இது பெரியார் காதில் விழுந்தவுடன் "காசு நம்மிடம் இருந்தால் என்ன. மகாசந்நிதானத்திடம் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்!” என்றார்.

26

துரையில் டி. கே. சண்முகம் சகோதரர்களின் ‘ராஜ ராஜ சோழன் நாடகம். நாமும் பெரியாரும் கலந்து கொண்டு