பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

197


கூறப்பெற்று விரைவில் வருவதாகக் கூறி இசைவு பெறப்பட்டது. சுதந்திரமான பணிக்கும், வாழ்க்கைக்கும் நிறுவனம் தடை என்ற அனுபவ வாக்கு நமது நிலையிலும் உறுதியாயிற்று.

வினோபாபாவேயுடன் ராமநாதபுரம், மதுரை மாவட்ட யாத்திரைகளில் கலந்து கொள்ள முடிந்தது. பின், மடத்தின் நிர்வாகத்திலிருந்து மெள்ள மெள்ள விடுதலை பெற்றுச் செல்லும் முயற்சியில் தீவிரம் குறைந்தது.

28

யாவில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூட்டம் ஒன்றை 1968 அக்டோபரில் வினோபாபாவே கூட்டினார். அதற்கு அவசியம் வரும்படி அழைப்பு வந்தது. கயாவுக்குச் சென்றோம். கயா, புத்தர் ஞானோதயம் பெற்ற புண்ணியத் திருத்தலம். புத்தரின் காலம் கி. மு. 5-ம் நூற்றாண்டு. புத்தர் அரச குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் வாழ்க்கையின் துன்பம் - மக்களின் துன்பம் முதலியவற்றைக் கண்டு அரசுக் கட்டிலைத் துறந்தார். துன்பத்தின் காரணத்தை ஆராய்ந்தறிந்தார். ஆசையே காரணம் என்று கண்டார். ஆசையென்பது கொச்சையானது; நிர்வாணத் தன்மையுடையது. எப்படியும் அதாவது வழி, துறை பற்றிக் கவலைப்படாமல் பொருட்களை அடைய நினைப்பது ஆசை திருமூலரும்,

"ஆசை அறுமின்கள்; ஆசை அறுமின்கள்
ஈச னோடாயினும் ஆசை அறுமின்கள்"


என்றார். நெறிமுறைகளோடு இசைந்த விருப்பங்கள் தவிர்க்கத் தக்கனவல்ல. இந்திய வரலாற்றில் புத்தர் கொள்கைகளின் தாக்கம் மிகுதி. இந்து மதம் புத்தரின் கொள்கையை நேரடி யாக ஏற்காததால் புத்த மதம் தனி மதமாயிற்று. ஆயினும், பெளத்தத்தின் தாக்கம் இந்து மதத்தில் நிறைய ஏற்பட்டிருக்