பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

199


சொத்து என்று ஏதும் இல்லாதிருந்ததால் ஏற்பட்ட ஆசையா? அல்லது பரஸ்பர நம்பிக்கையின்மையா? ஆய்வு செய்ய வேண்டும். இந்திய நாட்டின் நிலப்பரப்பளவையும் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லோருக்கும் நிலம் வழங்குவதன் மூலம் தீர்வுகாண இயலாது. அது மட்டுமல்ல, சாதாரணமாக ஏழைகள் சொத்தின் மேல் ஆசைப்படுவார்கள். ஆனால் வைத்துப் பாதுகாக்க மாட்டார்கள். நில உச்ச வரம்புச் சட்டம் மூலம் நிலமற்ற ஏழை விவாசயத் தொழிலாளர் களுக்கு வழங்கப்பெற்ற நிலம் அவர்கள் கைவசம் இல்லை என்பதை நீதிபதி கணபதியா பிள்ளை விசாரணை அறிக்கை அறிவித்தமையை நாடறியும். "உள்ளவர்களுக்கு மேலும் தரப்படும். இல்லாதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்ற விவிலிய வாக்கு நமது நாட்டு ஏழைகளைப் பொறுத்தவரை நூற்றுக்குநூறு உண்மையாயிற்று.

வினோபாபாவேயுடன் பழகிய தாக்கத்தால் நமது ஆதீன நிலங்கள் இடைத்தரகர் வழி குத்தகைக்கு விடும் பழக்கம் தவிர்க்கப் பெற்றது. விவசாயிகளுக்கே நேரடிக் குத்தகையாக ஒப்படைக்கப்பெறும் நடைமுறை அறிமுகப் படுத்தப்பெற்றது. நம் இளமைக்காலத்தில் கடியாபட்டியில் இருந்தபோது புனிதர் வினோபாபாவே மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக வாழ்நாள் முழுதும் அவர் நினைவு நம்மிடம் இருக்கும்.

29

றிவு வளர்ச்சிக்கு, ஆன்மாவின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பயணங்கள் மிகுதியும் துணை செய்யும். நமது நாயன்மார்கள், ஆழ்வார்கள் பயணம் செய்த வரலாறுகள் கவனத்துடன் படிக்கத்தக்கன.