பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

203


களிடையேகூட நல்லிணக்கம் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள்-மட்டக்களப்புத் தமிழர்களிடையேயாவது ஒருமைப்பாடு காணலாம் என்று ஆசைப்பட்டார் இவர். நமக்கும் நல்ல ஆலோசனையாகப்பட்டது. "மாநாட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்திலிருந்து அறிஞர்கள் அழைக்கப்பட்டுள்ளார்களா?" என்று உலக இந்து மாநாட்டு வரவேற்புக் குழுவினரிடம் கேட்டோம். அவர்கள் “இல்லை” என்றனர். நாம் ஒரு பெயர்ப்பட்டியல் கொடுத்து அவர்களை அழைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு வரவேற்புக் குழுவினர் உடன்படவில்லை. இந்த பெயர்ப் பட்டியலில் யாழ்ப் பாணத்தில் தலைசிறந்த சமய அறிஞர்கள்-பண்டிதமணி சி. கணபதியாபிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் இருந்தார்கள். வரவேற்புக் குழுவினர் "யாழ்ப்பாணத்துக்காரர்கள் மட்டக் களப்புக்காரர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதுப வர்கள். அதனால் அழைக்க இயலாது” என்றனர். ஒரு மொழி பேசும் மக்கள் ஒரு சமய நெறி நின்றொழுகும் மக்கள் சேர்ந்து வாழ முடியாத நிலையில் உலகம் பற்றிய எண்ணம் ஏதாவது பயன் தருமா? இதுதான் இன்றைய போக்கு. உலகத்தில் வாழும் எந்த இனத்தாரையும்விட இன்றும் தமிழ்நாட்டில் வாழும் தமிழரிடையில் உலகம் என்ற பெயர் ஒட்டிக் கொண்ட அமைப்புக்கள் பலப்பல. தமிழ்நாட்டில் என்ன உலகம் வேண்டியிருக்கிறது?

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை. ஆனால், உலகத்துடன் இணைந்த தமிழ் அமைப்புக்கள் ஏராளம். விநோதமான சூழ்நிலை.

நாம் "ஒருமைப்பாடு காணும் நிலை இருந்தால் ஒழிய மாநாட்டுக்கு வர விருப்பமில்லை” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டோம். வரவேற்புக் குழுவினர் ஒப்புக் கொண்டனர். நமது இலங்கைப் பயணமும் உறுதி செய்யப் பெற்றது. எல்லோருக்கும் தெரிவிக்கப் பெற்றது. நமது நம்பிக்கைக்குரிய புதுக்கோட்டை வழக்கறிஞர் வீர. சா.