பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இளைஞர்; நல்ல சொற்பொழிவாளர்; நம்பால் கனத்த அன்புடையவர். நமது ஈழத்துச் சொற்பொழிவுகள் நூலின் பதிப்பாசிரியர். அடுத்து பி. கனநாதபிள்ளை. இவர் ஆறுமுக நாவலர் பரம்பரையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் 19-ம் நூற்றாண்டில் செந்தமிழுக்கும் சிவ நெறிக்கும் செய்த தொண்டு அளப்பரியது, ஆறுமுக நாவலர் நிறுவிய அறச்செயல் இலங்கையிலும் உண்டு; தமிழ் நாட்டிலும் உண்டு. பி.கணநாத பிள்ளை ஆறுமுகநாவலர் செய்த அறத்தைக் காக்கும் கடமை பூண்டவர், முணு முணுக்கிறார்! அவ்வளவுதான் செயல் திறன்! ஆறுமுக நாவலர் நிறுவிய அறக்கட்டளை சார்பில் சிதம்பரத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி நடைபெறுகிறது. சென்னை தங்கசாலைத் தெருவில் ஒர் அச்சகம். இந்தப் பணிகளுக்கு ஊட்டமளிக்க வேண்டியிருக்கிறது. கனநாதபிள்ளை தமிழ் நாட்டில் உள்ள ஆறுமுக நாவலர் அறக்கட்டளைக்கு அறங்காவலராக நம்மை நியமனம் செய்துள்ளார்.

31

கஸ்ட் 1969-ல் ஒரு நாள் காலையில் தொலைபேசி ஒலித்தது. எடுத்துக் கேட்டோம். மாண்புமிகு சட்ட அமைச்சர் செ. மாதவன் பேசினார். அதாவது, தமிழ்நாடு மேல்சபை உறுப்பினராக இருக்க மாண்புமிகு முதல்வர் கலைஞர் சம்மதம் கேட்கச் சொன்னார் என்பதுதான் செய்தி! எதிர்பாராத செய்தி. வியப்பு: "அவசியமில்லை. வேண்டாம்." என்பது நமது பதில்.

இரண்டு நாள் கழித்துத் திரும்பவும் முதல்வர் மிகவும் விரும்புவதாகக் கூறித் தமது பங்கிலும் வற்புறுத்தினார். நமது பதில் யோசித்துச் சொல்வதாக இரண்டு நாள் தவணை கேட்கப்பெற்றது. முதல்வர் கலைஞரும் தொலைபேசி வழி பேசினார். உடனே, பொது வாழ்க்கை தொடங்கிய அந்த நாள் முதல் இன்று வரை நமது கெழுதகை நட்புக்குரிய