பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பணிகளைத் தேடிப் போகலாம்; பதவிகளைத் தேடிப் போகக் கூடாது. இந்தக் கோட்பாடு மிகவும் நல்லது.

32

ராஜாஜி மூதறிஞர்; தத்துவஞானி. அவருடைய அரசியல் சமூகக் கோட்பாடுகளில் முரண்பாடுகள் இருக்கலாம். இருப்பினும் ராஜாஜியின் மூதறிவு வியக்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இந்தியாவின் அரிய சொத்து. 1952-ல் அருள்நெறித் திருக்கூட்ட மாநில மாநாடு தேவகோட்டையில் நடந்தது. மாநாட்டைத் தொடங்கி வைக்க ராஜாஜி அழைக்கப்பெற்று, தேவகோட்டைக்குச் செல்லுமுன் குன்றக்குடி திருமடத்துக்கு வந்தார். சில மணித் துளிகள் மானுடத்தின் தரம் பற்றி பேசினார்.

பின், தேவகோட்டை மாநாடு! ராமனின் அரசு, அதிகாரம், பதவி நிராகரிப்பு, பாண்டவர்களின் பொறுமை, சீதையின் தவம், பரதனின்.பரிவு ஆகியவை இன்றைய மனித சமுதாயத்தில் வளர வேண்டும் என்று குறிப்பிட்டு அற்புத மான உரை நிகழ்த்தினார். மாநாட்டின் முடிவில் நாமே இயக்கத் தலைமையில் இருக்க விரும்பவில்லை. அருள்நெறித் திருக்கூட்டம் மக்கள் இயக்கமாக வளரவேண்டும் என்ற விருப்பத்தில் நெல்ல மாவட்டத் தலைவராக அப்போது விளங்கிய இலஞ்சி ஐ. ஏ. சிதம்பரம் பிள்ளையைத் தலைவராகத் தேர்வு செய்யும்படி கோரினோம். அவை ஒப்புக்கொண்டது. -

இலஞ்சி ஐ. ஏ. சிதம்பரம் பிள்ளை முதுகலைப் பட்டம் பெற்றவர்; நன்றாகப் பேசுவார். பழகுதலுக்கு இனியவர்; மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அருள்நெறித் திருக்கூட்டத்தை வளர்த்தார்; திருக்கோயில் தவறாமல் வார வழிபாடுகள் நடந்தன. நாடு தழுவிய நிலையில் நமது பயணம் அமைந்தது. சங்கரன்கோயில்