பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்த்து வருபவர் டாக்டர் ஜி. வேங்கடசாமி நாயுடு. இவர் நல்ல மருத்துவர்; பண்பாளர். இவருடைய அருமை மகள் நாச்சியார். இவர்கள் மருத்துவப் பணியைச் சேவையாக செய்துவருபவர்கள். டாக்டர் ஜி. வேங்கடசாமி நாயுடு, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் டீன் ஆகப்பணிசெய்தபோது, அருளாளர் ஒருவரின் கண் மருத்துவத்திற்காக ஒரு மாதம் நாம் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது டாக்டருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. டாக்டரிடம் கண்ணப்பநாயனார் வரலாற்றைக் கூறினோம் கண் மருத்துவத்துறைப் பார்வையில் கண்ணப்ப நாயனாரின் மருத்துவ அறிவு காலத்தால் முந்தையது என்று டாக்டர் பாராட்டினார். அதன்பிறகு அரசு பொது மருத்துவ மனையில் கண் மருத்துவப் பகுதிக்கென கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு 'கண்ணப்பர் கண் மருத்துவப் பகுதி என்று பெயர் சூட்டப்பெற்றது. இங்ங்ணம் அடியார்களைப் பின் பற்றித் தொண்டுகள் செய்வதுதான் முறை. வழிபாடு என்ற சொல்லே வழிப்படுதல் என்ற அடிப்படையில் பிறந்த சொல்லேயாம்.

தண்டியடிகள் திருவாரூர் வாழ்ந்த அடியார்; பிறவியிலேயே பார்வை இழந்தவர். திருவாரூர் கமலாலயம் பெரிய தெப்பக்குளம், ஐந்து வேலி பரப்பளவு உடையது. இது தூர்ந்து போயிற்று. இந்தச் செய்தியறிந்த தண்டியடிகள் கமலாலயத்தைத் துர்வை அள்ளித் துய்மை செய்ய விரும்பினார். கமலாலயத்தில் மண்ணெடுக்கும் இடத்தில் தறிநட்டு ஒரு கயிற்றின் நுனியை அதில் கட்டினார். அதற்கு எதிர்த்திசையில் கரையின் புறத்தே தறிநட்டு அதில் கயிற்றின் மறு நுனியைக் கட்டினார். கயிற்றைப் பிடித்துக் கொண்டே போய் ஒவ்வொரு தட்டாக மண்ணை அள்ளிக் கரையில் கொட்டினார். தொண்டின் ஆவேசம்!

மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயில் என்று ஒன்று இருக்கிறது! அற்புதமான திருக்கோயில், திருக்