பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருகிறார். அணியே திரட்டி வைத்துள்ளார். அந்த அணியில் சந்திரசேகரன் நல்ல ஊழியர். பழுத்த பழம் கீழப்பழுவூர் உ. ரத்தின சபாபதி பிள்ளை. இவர் நல்லவர்? சொன்னதைக் கேட்பவர். இவர் ஆசிரியராகப் பணி செய்த கீழப்பழுவூர்ப் பள்ளியில் தீண்டாமை விலக்குக்கு ஒர் ஆலோசனைக் கூட்டம் கூட்டப் பெற்றது. அது என்ன ஆலோசனை? மகப்பேறு இல்லாதவர்கள் ஆதிதிராவிடர் குழந்தைகளைச் சுவீகாரம் எடுத்து வளர்க்கலாம் என்பது தான் இந்த ஆலோசனை! ஆசிரியர் உ. ரத்தினசபாபதி பிள்ளை, உடனே தனது பள்ளியிலேயே படித்த ஆதிதிராவிடர் பெண் குழந்தை ஒன்றைச் சுவீகாரம் எடுத்து வளர்த்து டாக்டருக்குப் படிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி நாடு முழுதும் விதைக்கப்படும் சொற்கள் செயலுக்கு வந்தால் நாடு வளரும்; மக்கள் வாழ்வர்.

33

சாதி, மத வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி மோதல் களை உருவாக்குவதை எதிர்ப்பது எப்போதும் நமது பழக்கம்.

1982 மார்ச் மாதம்! கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா. அபிஷேகத்துக்குக் கடலில் தண்ணிர் எடுப்பதில் இந்து கிறிஸ்துவ சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. பின் இஸ்லாமிய சமூகத்துக்கும் பரவியது. மிகவும் மோசமான கலகம்! இழப்பு ஏராளம்! துன்பமும் துயரமும் எழுதிக்காட்ட இயலாதது. கலகம் தொடங்கிய சில நாட்கள் வரை சரியாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் நாம் மெளனம். பின் தணியாதது கண்டு நாகர்கோவிலுக்குச் சென்றோம். நாகர் கோவிலுக்கு வரும் தகவல் கெழுதகை நட்பும் பரிவும் கொண்ட அருமனை ஜி. ரீகுமாருக்குத் தரப்பெற்றது. அருமனை ஜி. ரீகுமார் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். உயர்ந்த பண்புகளை அணிகலன்களாகக் கொண்டவர்.