பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்த அமைதிப் பணியில் முழு ஒத்துழைப்பு அளித்தவர் பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகள். இவர் வைகுண்ட ஐயா மரபைச் சார்ந்த சமயத் தலைவர்; நல்ல இளைஞர் ஆர்வம் நிறைந்தவர்; நன்றாகப் பேசுவார். இவர் தம்பி பால ஜனாதிபதி நல்ல வழக்கறிஞர்; தொண்டில் ஆர்வலர். மற்றும் வழக்கறிஞர் ஆர். ராஜபாண்டியன், தியாகி வைத்தியலிங்கம், எல். செங்கோட முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுசீந்திரம் முத்துக்கிருஷ்ணபிள்ளையைச் சொல்லாமல் இருக்க இயலுமா? இவர் தொண்டர்களுக்கெல்லாம் உணவு வழங்கினார். தென்னிந்தியத் திருச்சபை ஆயர் ஜி. கிறிஸ்துதாஸ் மிகுந்த ஒத்துழைப்புத் தந்தார்.

அமைதிப் பணிக்கென தஞ்சை கோ. த. ரங்கநாதன், மேலுர் சுப. சொக்கலிங்கம், கோவை ப. ராஜேந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். தஞ்சை கோ. த. ரங்க நாதன் சுதந்திரப் போராட்ட வீரர். 'பலனில் பற்றின்றிப் பணி செய்க' என்ற கீதை வாசகத்துக்கு இலக்கணமானவர் மேலுரர் சுப. சொக்கலிங்கம். நல்ல தேசத்தொண்டர். தீண்டாமை விலக்குப் பணியில் பல ஆண்டுகள் நம்முடன் தொடர்ந்து பணியாற்றியவர்.

நாகர்கோவிலில் தங்கி அமைதிப் பணி செய்யப் பெற்றது. தொடக்கத்தில் கடினமாகவே இருந்தது. தானுலிங்க நாடார்-இந்து முன்னணியினர் தொடக்கத்தில் உடன்படவில்லை. நாம் உண்ணா நோன்பு இருந்தபின் அமைதிப் பணிக்கு ஒத்துழைப்புத் தர ஒப்புக்கொண்டனர்.

ஊர் ஊராக, பாதித்த குப்பங்கள் எல்லாவற்றுக்கும் சென்றோம். குடும்பங்களையெல்லாம் சந்தித்தோம். தமிழ் நாட்டு மக்கள் நல்ல வண்ணம் நிதி, துணிகள், அரிசி முதலிய உதவிகள் செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி களும் செய்யப்பெற்றன. சேதப்படுத்தப்பட்ட பள்ளந்துறை சர்ச், மருத்துவமனை சீரமைப்புக்கு நாம் ஒரு பங்கு நிதி