பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று நெருக்கடியான நிலையிலும் பாகனேரி ஆர். வி. சுவாமிநாதன் கூறினார்.

நேருஜி ஆ.தெக்கூருக்கு வந்தார். மேடைமீது ஏறினார். கலைத் தந்தை கருமுத்து தியாகராச செட்டியாரும் நாமும் பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து வரவேற்றோம். நமது இளமைப் பருவத்தில் தேசத் தலைவர்களைக் கண்டால் தேசிய முழக்கங்கள் விண்னைப் பிளக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் தலைவருக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்து வருவர். கூடவே பாதுகாப்பார்கள். தலைவரைப் போலீஸ் காவலில் ஒப்புவித்து விட்டு வேடிக்கை பார்க்கும் பழக்கம் இருந்ததில்லை. இந்தப் பழக்கம் இப்போது காங்கிரஸுக்கு அருகி வருகிறது. ராஜீவ்காந்தி மரணத்துக்குக்கூட இது ஒரு காரணம். நேருஜி, கடல் போல் இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, கைகளைக் கூப்பி வணங்கினார். மாநாட்டில் "நாட்டின் வளர்ச்சி மக்களின் கைகளிலேயே இருக்கிறது" என்று கூறினார். பள்ளிச் சீரமைப்பு முயற்சிகளைப் பாராட்டினார்.

1964 ஜனவரியில், புவனேசுவரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேருஜியின் உடல்நிலை பாதிக்கப்பெற்றது. அதற்குப் பிறகு நடந்த பாராளுமன்றக் கூட்ட நடவடிக்கைகளைப் பார்க்கவும், நேருஜியைப் பார்க்கவும் அனுமதி பெற்று பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்தோம்.

36

பாராளுமன்றத்தில் கேள்வி நேரம். பிரதமர் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் வந்தன. உடல் நலம் பாதித்த நிலையில் நேருஜியால் எளிதாக எழுந்திருக்க இயலவில்லை. பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் அவரை உட்கார்ந்தபடியே பதில் சொல்லும்படி ஒருமுகமாகக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், நேருஜி அதை மறுத்ததோடு, "இந்த நாட்டின் மிக