பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

237


காயில் பசையிருக்கும்; புளிக்கும். அதுபோல, காய் போன்றோர் தன்னலப்பற்றுடையவர்களாக இருப்பர். மற்றவர்களுக்குப் புளித்த வாழ்க்கை நடத்துவார்கள்.

பழம் சுவையுடையதாக இருக்கும்; ஒடும் உட்பகுதியும் பற்றற்ற நிலையில் இருக்கும். பழம் போன்ற மனிதர்கள் மற்றவர்கட்கு இன்பந்தருவார்கள்-தன்னலப் பற்றின்றி வாழ்வார்கள்.

பாத்திரமும்-திருக்கோயிலும்

பாத்திரம் முக்கியமல்ல-பாத்திரத்தில் செய்யப் பெற்ற பொருள்தான் முக்கியம் என்பது போல, தேர் முக்கியமல்ல-தேரில் இருக்கும் தேவன்தான் முக்கியம் என்பது போல, திருக்கோயில் முக்கியமல்ல-அங்கு இருக்கிற திருவருள்தான் முக்கியம்.

அறைகளும்-வேறுபாடுகளும்

வீட்டில் சிறுசிறு அறைகள் இருப்பது நமது வாழ்க்கை வசதிக்காக என்றிருப்பது போல, வாழ்க்கையில் சில சில வேறுபாடுகள் இருந்தால் அவை வாழ்க்கையின் நன்மைக்காகவே இருத்தல் வேண்டும்.

தீவினையும்-வேகாத உப்புமாவும்

வேகாத அரிசி உப்புமாவைத் தின்றவர்கள் அஜீரணத்தை அனுபவிப்பது போல, தீங்கு செய்தவர்கள் அந்தத் தீவினையை அனுபவித்தாக வேண்டும்.

கோலும்-உதவியாளர்களும்

நமது கால்கள் தளர்ந்து போகிற போது உதவியாகக் கோல் வைத்துக் கொள்வது போல, நிருவாகத்தில் அதிகப் பொறுப்புக்கள் ஏற்படும் போது அவற்றைச் செவ்வனே ஏற்று