பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடத்த உதவியாக உதவியாளர்களை வைத்துக் கொள்ளுகிறோம்.

கண்வலிக்காரனும்-பத்தாம் பசலியும்

கண்வலிக்காரர்கள் வெளிச்சத்தைப் பார்க்கக் கூசுவது போல, சமுதாயத்தில் உள்ள பத்தாம் பசலிக் கொள்கையினர் புதிய கண்ணோட்டத்தைக் காணக் கூசுகிறார்கள்.

வேட்டியும்-கல்வியும்

வேட்டிக் கட்டிக் கொள்வது தனி மனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல, சமுதாய ஒழுக்கத்திற்கும் பயன்படுகிறது. அதுபோல, கல்வி, தனி மனிதனின் நலத்திற்கு மட்டுமல்ல சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

அடித்தளமும்-மேல்மாடியும்

அடித்தளத்தை வலுப்படுத்தாமல் மேல் மாடியை அழகுபடுத்துவதால் என்ன பயன்? அதுபோல, இளஞ் சிறுவர்களுக்கு அவர்களின் மனப்போக்கும், மனத் தத்துவமும் அறிந்த நல்லவர்களையும், வல்லவர்களையும், ஆசிரியர்களாக்கி, சின்னஞ்சிறு சிறுவர்களைக் கல்வித் துறையில்-நல்ல முறையில் வளர்க்காமல் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்களையும், மனவியல் வல்லுநர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பதால் என்ன பயன்?

உலையும்-உள்ளமும்

உலையில் அரிசி வெந்து கொண்டிருக்கும் பொழுது கொதிவந்து பொங்கினால் கரண்டியைக் கொண்டு நன்றாகக் கிளறிவிட்டுப் பொங்கி வழியாமல் தடுத்து விடுகிறோம். அப்படிச் செய்வதால் அரிசியும் நன்றாக நின்று வேகிறது.