பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆறு இயல்பிலே ஊற்றெடுக்கிறது. அதனை நாம் துார்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டால் பக்தி ஆறு பெருக் கெடுக்கும். மனத்திலே வஞ்சம், பொய், களவு, சூது என்ற வஞ்ச ஆறுகள் வற்றினால்தான் பக்தி ஆறு பெருக்கெடுக்கும்.

இலட்சியமும்-சுவையுணவும்

பசித்தபோது சுவையுணவு சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடிந்ததும் கைகளைக் கழுவிவிடுகிறோமல்லவா? அது போல, உலகியலில் மிக்குயர்ந்த இலட்சியத்தை நோக்கிச் செல்லும் போது அதற்குச் சாதனமாகக் கொண்ட பொருளியல் பற்று முதலியவற்றை நாம் அந்த இலட்சியத்தை அடைந்ததும் அகற்றிவிட வேண்டும்.

மூளையும்-சமயக்கணக்கரும்

மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனாலும், அது தானே அள்ளிச் சாப்பிடுவதில்லை. பிற உறுப்புக்கள் முயன்று உழைத்து மூளையைக் காப்பாற்றுகின்றன.

வேதம் ஓதுகிறவர்களும் சமயக் கணக்கர்களும் சமுதாயத்திற்கு மூளை போன்றவர்கள்; அவர்கள் தமது வாழ்க்கைப் பிரச்னைகளில் ஈடுபடாமல் தத்தம் கடமைகளைச் செய்தால், பிற உறுப்புக்கள் முயன்று உழைத்து மூளையைக் காப்பதுபோல, சமுதாயத்தின் மூளைபோல விளங்கும் அவர்களைச் சமுதாயம் முயன்று உழைத்துக் காக்கும்.

ஊற்று நீரும்-மழை நீரும்

சிந்தனையால் பெறும் அறிவு ஊற்று நீர் போல. படிப்பால் பெறும் அறிவு மழை நீர் போல. ஊற்று நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். மழைநீரால் நிலம் நனையும். எனினும் ஈரம் எப்போதும் இருந்து கொண்டே