பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



செழிப்புள்ள சமுதாயத்தோடு கலந்து வாழும் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இன்பமே தரும்.

தாழ்வாரமும்-சமுதாயமும்

வீட்டுத் திண்ணையின் முன்னே தாழ்வாரம் இருந்தால் வெளியே இருக்கிற வெப்பமும் தட்பமும் தாக்காத வண்ணம் வசிக்கலாம். தாழ்வாரம் இல்லையானால், வெப்பமும் தட்பமும் வீட்டில் வசிப்பவர்களைத் தாக்கவே செய்யும், அதுபோல, சமுதாயம் என்ற தாழ்வாரம் இருந்தால் அதனுள்ளடங்கிய தனி மனிதன் வாழ்க்கை இன்பம் தழுவியதாக இருக்கும்.

கட்டிடமும்-சமுதாயமும்

ஒரு கட்டிட அமைப்பில் சுவர்கள் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பொருந்தினாலேயே கட்டிடம் வலிமை யுடையதாக அமையும். அதுபோல, மனிதர்களுக்குள் அன்பும் அறிவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தாலேயே சமுதாய அமைப்பு வலிமையும் வளமும் உடையதாக இருக்கும்!

நாய்களும்-தீயர்களும்

கார்கள் ஓடும்பொழுது சில நாய்கள் குரைத்துக் கொண்டு விரட்டும். கொஞ்ச துரம் போன பிறகு தொடர முடியாமல் எய்த்துப் போய் நிற்கும். அது போல, சமுதாய நலத் தொண்டு புரிபவர்களைச் சில சுய நலமிகளும், தீய சக்தியுடையவர்களும் தூற்றத் தலைப்படுவார்கள்-இறுதியில் தோல்வியுற்று அடங்கி விடுவார்கள்.

அஞ்சற் பெட்டிகள்

உயிரினங்கள் இறைவனால் அங்கீகரிக்கப் பெற்ற அஞ்சற் பெட்டிகள்; சாதாரணமாக யாருக்கு அஞ்சல்