பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

261



சமையற்காரரும்-ஆசிரியரும்

சமையற்காரர்களின் திறமையைப் பொறுத்துச் சமையலின் சுவை அமைவதுபோல, ஆசிரியர்களின் திறமையைப் பொறுத்தே மாணவர்களின் எதிர்காலம் அமையும்.

தராசும்-மனிதனும்

ஒன்றை நிறுத்துக் காட்டுகின்ற தராசின் முள் மட்டும் தனித்துக் கிடக்குமானால் அதற்குக் கடமையுமில்லை, சிறப்பு மில்லை. அதே முள் தராசில் இணைக்கப் பெறுமானால் கடமையுண்டு-சிறப்பும் உண்டு. அப்பொழுது அம்முள் குறையையும், நிறையையும் காட்ட வேண்டும். அதுபோல, மனிதர்கள் பொறுப்புள்ள பதவிகளைப் பெறுவார்களானால், அப்பதவிகளுக்கு ஏற்பக் கடமைகளுண்டு. குறை-நிறை காட்டும் கடமை புரியாத தராசு-ஓட்டைத் தராசு, கடமையைச் செய்யாமல் பதவியில் வீற்றிருப்பவர்கள் உபயோகமற்றவர்கள்; உதவாக்கரைகள்.

மரமும்-மதமும்

மரம் செழித்து வளர வேண்டுமானால் அந்த மரம் தங்கி முளைக்கும் மண்ணைச் செழிப்பாக்க வேண்டும். மதம் செழித்து வளர வேண்டுமானால் அம்மதத்தைத் தழுவுகிற அம்மதத்தில் வாழுகிற மனிதர்களின் வாழ்க்கையைச் செழிப்பாக்க வேண்டும்.

கேணியும்-மனித வாழ்வும்

கேணிச்சுவர் வெள்ளியால் கட்டப் பெற்றிருந்தாலும் வாளி தங்கத்தால் செய்யப் பெற்றிருந்தாலும், கயிறு வெள்ளியினால் செய்யப் பெற்றிருந்தாலும் அந்த கேணியில் இறைக்கும் நீர் குப்பென்று நாற்றமடித்தால் என்ன பயன்? அது போல, மனிதன் மாடமாளிகையில் வாழ்ந்தாலும்