பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கூடகோபுரத்தில் குடியிருந்தாலும், எல்லா இன்பங்களையும் அனுபவித்தாலும் அவனிடத்தே அன்பும், ஆன்மீக உணர்வும், மனிதப் பண்பும் இல்லையானால் என்ன பயன்?

உணவும்-வழிபாடும்

சாப்பிடுகிற மனிதனுக்குப் பசி நீங்க வேண்டும்; குளிக்கிற மனிதனுக்கு உடல் அழுக்கு நீங்கி வெப்பம் தணிய வேண்டும் என்பனபோல, வழிபாடு செய்கிற மனிதனுக்கு உள்ளத்தில் உள்ள வெப்ப நோய் நீங்க வேண்டும்; இல்லை யானால் வழிபாட்டால் என்ன பயன்?

தாமரையும்-தனி மனிதனும்

தண்ணிருக்கும் தாமரைக்கும் இருக்கிற உறவு போல, மண்ணுக்கும் மரத்திற்கும் இருக்கிற உறவு போலத் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.

மண்ணின் ஈர்ப்பும்-இழிதகைமையும்

விண்ணோக்கிச் செல்லும் பொருளை மண்ணோக்கி இழுக்கும் ஈர்ப்புச் சக்தி மண்ணுக்கு இருப்பதுபோல, மேல் நோக்கிப் பறக்கிற மனிதனைக் கீழ்நோக்கி இழுக்கின்ற ஆற்றல் வஞ்சனை பொய் களவு சூது சினம் ஆகியவற்றிற்கு உண்டு. அவற்றின் ஆற்றலை அடக்கி மனிதனை மாமனிதனாக ஆக்கும் சக்தி மதத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உண்டு.

ஆறும்-இறைவனும்

ஆறுகளுக்குத் துறை பலவாக இருக்கலாம்; ஆனாலும் நாம் ஒரு நேரத்தில் இறங்கிக் குளிக்க ஒரு துறையே பயன்படும். அதுபோல, இறைவனுக்குப் பெயர்கள் பலவாக இருக்கலாம். எனினும் நாம் அனுபவித்து மகிழ-பயன் பெற