பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

267



திருவாசக உவமைகள்


இரைதேர் கொக்கு

ற்றங்கரைகளிலும் - குளத்தங்கரைகளிலும் கொக்கு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கும். பரபரப்பின்றி - தவம் செய்வது போல உட்கார்ந்து கொண்டிருக்கும். ஏன்? இரையை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. கொக்குக்கு இரை மீன்! அம்மீன்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கரையில்தான் அது உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. ஏன் ஓடுகிற மீன் குஞ்சுகளை-மீன்களைப் பிடிக்கக் கூடாதா? பிடிக்கலாம்; தடையில்லை. ஆனால், வயிற்றுக்குப் போதுமானதாக-திரும்பத் திரும்பப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாதபடி ஒரே முயற்சியில் பிடித்து உண்ணும் அளவிற்குப் பெரிய மீன் வரும் வரைக் காத்திருக்கின்றது. இந்தக் காட்சியும் கொக்கின் வாழ்க்கை முறையும் கவராத கவிஞர்கள் கிடையா? மாணிக்கவாசகரும் இந்தக் காட்சியில்-வாழ்க்கையில் கவர்ச்சிக்கப்பட்டுள்ளார். தாமும் இரைதேர் கொக்கு போல வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

உயிருக்கு இரை இறைவனின் திருவருளேயாம். உடற் பசிக்கு எடுக்கும் இரை-மீண்டும் மீண்டும் பசியைத் தோற்றுவிக்கும். ஆதலால், உயிர் மீண்டும் பசிக்காதஅனுபவிப்பதால் மேலும் மேலும் இன்பப் பெருக்கினைத் தருகின்ற இறைவனின் திருவருளையே உணவாக ஏற்று உண்டு தேக்கெறிந்து வாழ்தல் வேண்டும். இந்த வேட்கை மாணிக்கவாசகரின் பெரு விருப்பம். மாணிக்கவாசகப் பெருமான் உடல் தாங்கி உலவினாலும், உடம்பு நீங்கி விடுதலை பெறுதலையே விரும்பினார். அவரது விருப்பம் கை கூடுவதற்குரிய காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இடைவெளியில் அமைச்சு அதிகாரம் பரிகள் வாங்குதல் ஆகிய பல்வேறு கவர்ச்சிகளுக்குரிய பேறுகள்