பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

277



பயனைத் தர கொம்பு தேவை. அங்ங்ணம் கொம்பின்றி வாடிய முல்லைக் கொடியின் இயல்பறிந்துதானே பாரி முல்லைக்கொடி படரத் தேரை நிறுத்தினான்? பற்றிப் படரக் கொம்பு கிடைக்காத கொடி படராமல் கிடந்து அழியும். உயிர்க் கொடி-உயிருக்குப் பற்றுக்கோடாக இருக்கிற இறைவ னுடைய திருவருள் கொம்பு இறைவனின் திருவருளைச் சார்பாகக் கொண்டு தழுவி வாழும் உயிர் சிவஞானம் மணக்கும். திருவருட்சார்பு கிடைக்காமல் ஏமாற்றமடையும் உயிர் அலமந்து அழியும். இதனை, கொம்பரிலாக் கொடி போல அலமந்து என்று குறிப்பிடுகின்றார். இதனை,

கொம்பரில் லாக்கொடி போல்அல
மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணர் நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அம்பர மேநில னேயனல்
காலொடப் பானவனே.

இப்பாடலின் மூலம் நாம் உணர்வது கொடிக்குக் கொம்பு இன்றியமையாதது போல, உயிருக்குத் திருவருட் சார்பு பற்றுக்கோடு, கொடி என்றமையால், கொம்பில் ஏறிப் படர் வதற்கு உரிய தகுதிப்பாட்டை அடைந்த ஒன்றினைத்தான் கொடி என்று அழைப்பது மரபு. படரும் தகுதி பெறாமல் குழியளவிலேயே இருப்பதையோ அல்லது முளைக்காமல் மக்கி மண்ணில் மறைந்து கிடக்கும் ஒன்றினையோ கொடி என்று குறிப்பிடுவதில்லை. இங்கு கொடிபோல் அலமந்தனன் என்று உயிரைக் கொடி போல என்று குறிப்பிடுவதால் உயிர் மல நீக்கம் பெற்று திருவருட் சக்தியின் பதிவு பெற்று (சத்தினி பாதம்) இறைவனுடைய திருவருளைச் சார்ந்து நின்று ஒழுகுதற்குரிய தகுதிப்பாட்டை அடைந்திருக்கிறது என்பது