பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

287


அவர்களுக்குக் கடமையுமில்லை, உரிமையுமில்லை. எனவே, திருவருட் சிந்தனையோடு நல்லியல்புகள் பெற்று வாழ்க்கை வாழ்தலே சிறப்புமிக்கது. இதனை மாணிக்கவாசகர் கூறுகிறார், பாருங்கள்:

உடையா னேநி ன்றனையுள்கி
உள்ள முருக்கும் பெருங்காதல்
உடையா ருடையாய் நின்பாதம்
சேரக் கண்டிங்(கு) ஊர்நாயின்
கடையா னேனெஞ்(சு) உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியா தேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்(கு)
இருப்ப தாகவடித்தா யே!


ஊர் ஆவும் குருட்டாவும்

மாலைநேரம். மேயச் சென்றிருந்த பசுக்கள் வயிறார மேய்ந்துவிட்டு வீடுகளை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. துரத்தில் தன்னுடைய கன்றுகளைப் பார்த்தவுடன் கனைக் கின்றன. இப்பசுக்களுடன் வந்த ஒரு குருட்டுப் பசுவும் கனைத்தது. மற்ற பசுக்கள் கன்றைப் பார்த்து உறவு மேலிட்ட உணர்ச்சியால் கத்தின. குருட்டுப் பசுவோ, கன்றைப் பார்க்காமல் உறவு உணர்வு இல்லாமல் மற்றவை கத்துவதனால் கத்தியது என்ற இந்த எடுத்துக்காட்டை மாணிக்கவாசகர் பொய்யடியார் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டுகிறார். இறைவன்மீது தணியாத காதல் கொண்டு ஒன்றாகி, உடனாகி இருந்து உள்உள்கி நினைந்து அனுபவிப்பவர்கள் மெய்யடியார்கள். அதன் காரணமாக, அவர்கள் இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெறுகிறார்கள். பொய்யடியார்களோ இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்து அழுவதில்லை; அழ நினைப்பதுமில்லை. ஆனாலும் மெய்யடியார்கள் பெற்றனுபவிக்கும் இன்பத்தைப்