பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமக்கு இருந்த அக்கறை சிலபொழுது மகிழ்வையும் சில பொழுது துன்பத்தையும் கொடுத்திருக்கிறது. இராமன், சீதையை நெருப்பிலிட்டுத் துய்மை காண முயன்றதைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் சோதனைகள் நடந்த துண்டு. ஆனாலும் இறைவன் திருவருளால் யாதுமோர் குறைவில்லை என்றாயிற்று! அந்தக் காலங்களிலெல்லாம் நம்மோடு உடனிருந்த பரிவுமிகுந்த நண்பர்களுக்கும் பொறுப் புணர்ந்து செயலாற்றிய அலுவலர்களுக்கும் நாம் எங்ங்னம் நன்றி செலுத்த முடியும்!

இந்த முதற்சுற்றின் நீண்ட பயணத்தில் சிந்தனையாலும், கருத்தாலும், எடுத்துக்கொண்ட பணிகளாலும் நாம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். இந்த ஒவ்வொரு படிநிலையிலும் நம்முடைய சிந்தனையும் கருத்தும் சமூகத்தைநோக்கி விரிந்து வளர்ந்தே வந்திருக்கிறது; பின்னடைவு ஏற்பட்டதில்லை. 1942-இல் நாட்டு விடுதலைக்காக, தனிமனிதர் அறப்போராட்டத்தை அண்ணல் காந்தியடிகள் அறிவித்தபோது நமது நெஞ்சத்தில் நாட்டுப்பற்று வித்திடப்பெற்றது. இந்த உணர்வை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

முதற்படிநிலையில் தருமபுர ஆதீனத்தில் துறவு ஏற்று ஆங்கிலத்தொடு அருந்தமிழும் கற்றிடும் இனியவாய்ப்பினைப் பெற்றோம். அங்கேயே எல்லார்க்கும் பணிவுடனிருத்தல், தொண்டு செய்தல் ஆகிய பண்பியல்புகளை அடையப்பெற்றோம்.

தருமையில் வாழ்ந்த காலம் “ஞானமுதலை”த் தேடிக் கொண்டகாலம். தொண்டுசெய்யும் பழக்கத்திற்கு ஆளான காலம். அந்த அமைதி நிறைந்த வாழ்க்கைச் சூழலிலும் ஒருபுயல் வீசியது, அப்புயல் வாழ்க்கையைச் சிதறடித்து விடக்கூடிய அளவுக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. ஆயினும் உறுதியுடன் கூடிய குரு பக்தியோடும் திருவருட்