பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெற விரும்புகிறார்கள். விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முழுதும் முயற்சி செய்வதில்லை. அடியார்கள் இறைவ னுடைய நாமத்தைச் சொல்லுவதைப் பார்த்து இவர்களும் சொல்லுகிறார்கள். ஆனாலும், மெய்யடியார்கள் நினைந்து நினைந்து நெக்கு நெக்குருகி உளங்கலந்து ஒதுதல் போல், இவர்கள் ஒதவில்லை. உதற்றால் ஒதுகிறார்கள். ஒலிக்குறிப்புத் தோன்றுகிறதே தவிர உள்ளுணர்வு தோன்றவில்லை. இறைவனுடைய திருவருளின்பம் உள்ளத்தால் அனுபவிக்கக் கூடிய ஒன்று. அஃது எப்படி வெறும் போலித்தனமான பொறிகளின் இயக்கத்திற்குக் கிடைக்கும்? பொறிகள், ஒன்றின் குறையினை இன்னொன்று நிரப்பமுடியும். ஆனால் உள்ளம் அப்படியல்ல-இதே கருத்தினை.

கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர்புகுதும்’ என்று உமாபதி சிவமும் குறிப்பிடுகின்றார்.

மேலும், கண்ணுள்ள பசுக்கள் நன்றாக மேய்ந்து வந்திருப்பதால் அதனிடத்தே பால் வளம் இருக்கும். அது, கன்றை நோக்கிக் கனிந்தழைத்து ஊட்ட முடியும். குருட்டுப் பசுவோ, வழக்கத்தினால் மேய்ச்சல் தரைக்குப் போயிற்று. எனினும் கண் குருடானமையினால் நல்ல வண்ணம் மேய்ந் திருக்க முடியாது-பால்வளம் இருக்காது. அது எப்படி கன்றுக்கு அன்பு காட்டமுடியும்? அதுபோல மெய்யடி யார்கள் ஞானப் பசியுடையராயிருத்தலால் ஞான நூல் களைக் கற்றும் கேட்டும் தனக்குவமை இல்லாத தலைவன் மீது முருகிய அன்பை வளர்க்கிறார்கள். இறைவனைக் கண்ணப்பர் முழுக்காட்டியது போல அன்பினால் முழுக் காட்டிப் பரவசப்படுத்த முடியும். பொய்யடியார்க்கு ஞானப் பசி இல்லை. இறைவன் மீது தணியாத காதலும் இல்லை ஞான நூல்களைக் கற்கவும் கேட்கவும் வாய்ப்பில்லை. பழக்கத்தினாலேயே பெயர் சொல்லுவார்கள். எனினும் மெய்யுணர்வில்லை. அவர்கள் எங்ங்னம் இறைவனை மகிழ்வித்துத் திருவருளைப் பெற முடியும்?