பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குன்றக்குடிக்கு உடனடியாகப் புறப்பட வேண்டும் என்று சொன்னார்கள்? ஏன் என்று கேட்டோம். "குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவர் பொறுப் பேற்பதற்காக" என்று சொன்னார்கள். "திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களிடத்தில் உத்தரவு பெறவேண்டாமா?" என்று கேட்டோம். "முதலில் குன்றக்குடிக்குப் போய்ப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு வந்து சொல்லிக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை" என்றும் கூறினார்கள். 'நாம் கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்ற திருவாசகப்பாடலை எடுத்துக்காட்டிக் "கண்டிப்பாக இயலாது" என்று அனுப்பிவிட்டோம்! திரும்பத்திரும்ப வற்புறுத்தியதால் "திருவருள் திருமகா சந்நிதானம் அவர் களிடத்தில் கேட்டுப்பாருங்கள்" என்று போக்குக் காட்டினோம். சிலநாள் கழித்து, திரு. கைலாசம்பிள்ளை அவர்கள், குன்றக்குடித் திருமடத்துக் கைலாசத்தம்பிரான் அவர்கள், குன்றக்குடித் திருமடத்து முகவர் ஆகியோர், திருவருள் திருமகாசந்நிதானம் அவர்களைக் கண்டு கொண்டு நம்மைக் குன்றக்குடிக்குத் தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் நம்மை அழைத்துக் கேட்டார்கள். ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பது "கல்விக்கும் தொண்டுக்கும் இடையூறாக இருக்கும். ஆதலால், வேண்டாம்" என்று நாம் கூறினோம். திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களும் வந்தவர்களிடத்தில் "அவருக்கே விருப்பமில்லை. நாம் என்ன செய்வது?" என்றுகூறி அனுப்பி விட்டார்கள். இடையில் வேறொருவர் குன்றக்குடித் திரு மடத்திற்குப் பொறுப்பேற்கத் தயாரிக்கப்பட்டார். ஆனால் குன்றக்குடித் திருமடத்தின் தலைவரும் இசைந்து வரவில்லை. மீண்டும் குன்றக்குடியிலிருந்து அருட்டிரு கைலாசத் தம்பிரான் முதலியோர் நம்மை நாடி அழைத்து வருவதற்கு தருமபுரத்திற்கு வந்தனர். அருட்டிரு கைலாசத் தம்பிரான் அவர்கள் குன்றக்குடி திருமடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலிருந்தவர். குன்றக்குடித் திருமடத்தின் மீது அவருக்கு