நடந்ததும் நடக்க வேண்டியதும்
21
அளவற்ற ஈடுபாடு. அதனால் அந்த வயது மூத்தவர், திருவருள் திருமகா சந்நிதானத்தின் திருமுன்பு நிலமிசை வீழ்ந்து வணக்கம் செலுத்தியவர், எழுந்திருக்காமலேயே அழுதுபுலம்பிக் "குன்றக்குடியைக் காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார். அவருடைய கோரிக்கை நம்மைக் குன்றக்குடிக்குத் தரவேண்டுமென்பதே திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் அறச்சங்கடத்திற் காளானார்கள். ஒருபுறம் குன்றக்குடி ஆதீனத்தின் பாது காப்பு: பிறிதொருபுறம் நம்முடைய விருப்பமின்மை! கடைஒ யாகச் சொக்கநாதர் சந்நிதியில் திருமுறையில் கயிறுசாத்திய பார்ப்பது, உத்தரவு கொடுத்தால் நாம் குன்றக்குடிக்குப் போது வேண்டும்” என்று திருவருள் திருமகா சந்நிதானத்தில் உத்தரவு செய்தார்கள். மறுநாட் காலை சொக்கநாதர் வழிபாடு வழக்கம்போலப் பூசைமடத்திற்குப் போயிருந்தோம். குன்றக் குடி மடத்து அருட்டிரு கைலாசத் தம்பிரான் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் வந்திருந்தார்கள். இன்றைய தருமபுரம் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களும் உடனிருந்தார்கள். பூசைமுடிந்த பிறகு அடங்கன் முறையில் கயிறுசாத்தப் பெற்றது. திருஞானசம்பந்தர் அருளிச்செய்த "திருக்கடவூர் மயானப் பதிகம்” கிடைத்தது.
இப்பதிகத்தின் முதல் திருப்பாடல்,
'வரிய மறையார் பிறையார்
மலையோர் சிலையா வணங்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும்
முசலம் உடையார்
கரிய மிடறு முடையார் கடவூர்
மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்
எம் பெருமா னடிகளே!'
என்ற திருப்பாடலில் "பெரிய விடைமேல் வருவார்" என்ற குறிப்பு இருந்தமையால் நாம் குன்றக்குடி வருவது தவிர்க்க