உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியாததாயிற்று. ஒருவாறாகப் பிரியா விடைபெற்று குன்றக் குடிக்கு வந்து சேர்ந்தோம். திருமடத்து மரபுப்படி 5-9-1949-இல் பட்டம் கட்டப்பெற்றன. உரிம ஆவணங்கள் எழுதப்பெற்றன. 1952 வரையில் திருமடத்தில் குன்றக்குடி ஆதீனத்தின் சின்னப்பட்டமாக அமர்ந்து குரு, சிவம், அடியார் கூட்ட வழிபாடுகள் செய்து கொண்டு அமைதியாக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் காலத்தில் நல்ல ஆய்வு மனப்பான்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குன்றக்குடி திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் பழைய மரபுகளில் பிடிப்புள்ளவர்கள். நாம் திருமடத்திற்கு வெளியில் செல்வதை விரும்புவதில்லை. இதனால், பேச்சுப் பணிக்குத் தடை ஏற்பட்டது. ஆயினும் நம்விருப்பம் கருதி ஒரோ வழி அனுமதித்தார்கள்.

இந்தத் திருமடத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு புயல் சுழன்று அடிக்கும் சூழல் ஏற்பட்டது. அதாவது, திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களிடம், சிலர் கோள்களைச் சொல்லி நம்முடைய உரிம ஆவணத்தைச் செல்லாததாக்கி விடுவது என்ற அளவிற்கு முயற்சியினை மேற்கொண்டார்கள். திருவண்ணாமலைத் தைப்பூசத் திருவிழாச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது புகைவண்டியில் பயணம். நாம் திருவண்ணாமலைக்குப் பேசச் சென்றிருந்த பொழுது கோள் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் உரிம ஆவணத்தை இரத்து செய்வதற்காக மதுரை சென்று விட்டார்கள். அப்பொழுது ஆதீனத்தின் வழக்கறிஞராக திரு. D. C. சீனிவாச ஐயங்கார் இருந்தார். இவர் அப்பொழுது மதுரைத் தமிழச் சங்கத்தின் தலைவ ராகவும் இருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் D. S. சீனிவாச ஐயங்கார் அவர்கள் அழைப்பின்பேரில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பேசிவிட்டு வந்திருந்தோம். அதனால்