உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேறு வழிகளை நாடக்கூடாது என்பது மரபு. நாம் இந்தப் பகுதியை விரிவாகச் சொன்னதற்குக் காரணம், நாம் தமிழ் நாட்டின் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டபொழுது பதவியாசையால் ஏற்றுக்கொண்டதாகச் சிலர் பழி கூறினர்; புறம் பேசினர். ஒரு ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கே வலிய அழைத்தும் வரமறுத்த நாம், சட்டமன்ற மேலவைப் பதவிக்கு எளிதில் வசப்படு வோமா? சட்டமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது டாக்டர் கலைஞர் அவர்களின் எண்ணம். அன்றைய சட்ட அமைச்சராக இருந்த வரும் நம்பால் உழுவலன்பு கொண்டவருமாகிய மாண்புமிகு செ. மாதவன் அவர்கள் மூலம் கேட்டனுப்பினார். நாம் முடிவு சொல்ல மூன்று நாட்களாயின. நாம் அமைதியாக ஆலோ சித்து, நம்முடைய வாழ்க்கையில் அக்கறையுடைய தருமையா தீனம் திருவருள் திருமகா சந்நிதானம் கயிலைக்குருமணி அவர்கள், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் அவர்கள் ஆகியோரைக் கலந்துகொண்ட பிறகே இசைவு தந்தோம். இந்தமாதிரிச் செய்திகளில் "ஊரார் தத்தம் மனத்தன. பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே" என்ற மணி மொழி நம்முடைய வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பொருந்துவதாயிற்று.

1952-இல் ஆதீனத்தின் முழுப்பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி, ஒரு சமய விழாவாக நடந்தது. அதன் தொடர்ச்சியாகத் தீண்டாமை விலக் கக்கு வித்திடும் பணியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வா ழம் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சியும் அமைக்கப் பெற்று நடந்தது. இதிலிருந்து மூன்றாம்படி நிலை தொடங்குகிறது. 1952-இல் இருந்து கடுமையாக உழைத்து ஆதீனம் திருக்கோயில் நிலபுலன்களை நேரில் சென்று கண்டு, வருவாய்ப் பெருக்கத் திற்கு வழி செய்யப் பெற்றது. 1952இல் அருள் நெறித்திருக் கூட்டம் தொடங்கப்பெற்றது. அருள்நெறித் திருக்கூட்டத்