பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிற்போர் வரிசையும் நீளுகிறது. உற்பத்தியும் பாதிக்கப் படுகிறது.

வேறு சிலர் தாம் செய்யும் வேலைக்குப் பன்மடங்கு அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். இவர்களுடைய மனித ஆற்றல் குறைகிறது. உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. ஆனால் நுகரும் சந்தை வளர்கிறது. இதனாலும் வறுமை வளர்கிறது. ஒருவருக்கு வேலை கிடைத்தால், அவர் முறையாக வேலை பார்த்தால் குறைந்தது மேலும் ஐவருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்க முடியும்.

தொழிற்கல்வி பயின்றவர்களிடையிலும் வேலை வாய்ப்பு பற்றிய நிலைமைகள் எதுவும் மாறவில்லை. தொழிற் கல்விகளைப் பொருத்தவரையில், டாக்டர்கள், பொறியாளர்கள் இவர்கள் தாமே கூடத் தொழில் செய்யலாம். ஆனால், இந்த வாய்ப்பையும் அரசுப் பணிகளில் வேலை பார்ப்போர் தட்டிப் பறித்து விடுகின்றனர்.

இதனால் நம்முடைய பொருளாதார வளர்ச்சி முயற்சிகளும் அதனைச் சார்ந்த வேலை வாய்ப்புக்களும் பின்னடைவிலேயே உள்ளன. இந்நிலையில் மாற்றம் ஏற்படா விட்டால், அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா இப்போது இருப்பது போலவே இருக்கும். இதை நீங்கள் விரும்புகின்றீர்களா?

திருவள்ளுவர், "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று கூறுகின்றார். இங்குப் பொருள் என்பது தங்கமும், பணமும் அல்ல. நுகரும் பொருட்கள், உணவு முதலியனவாம். தங்கத்திற்கும், பணத்திற்கும் கிடைத்துள்ள பாதுகாப்பு வசதிகள் உணவுப் பொருள்களுக்குக் கிடைக்கவில்லை.

ஆண்டுதோறும் லட்சணக்கான டன் தானியங்கள் போதிய பாதுகாப்பின்றி அழிந்து போகின்றன என்று அரசின் தகவலே கூறுகிறது. பொருள் என்றால் மனிதன்