பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உண்பது மட்டுமன்றி, பசி, பட்டினியை அறவே ஒழித்து வெளியேற்ற இயலும். "வறுமையே வெளியேறு" என்ற கோஷத்திற்கு வெற்றி சேர்க்க முடியும்.

இன்று நமது பொது உணவுப் பொருள், உற்பத்தியில் 20 விழுக்காடு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நமது உணவுத் தேவையில் 33 விழுக்காடு பற்றாக்குறை தான். ஆயினும் மகிழ்ச்சியான ஒரு செய்தி, மக்கள் தொகையை ஈடுகொடுத்து உணவுப் பொருள் உற்பத்தியாகி உள்ளது.

இந்திய மக்கள் தொகை, இந்திய நாட்டளவில் 2.3 தான் கூடியிருக்கிறது. ஆனால், விவசாயத்தில் வளர்ச்சி 42 தமிழ் நாட்டில் வளர்ச்சி 3.1 தேவையைவிட உற்பத்தி கூடுதலாகியுள்ளது.

இப்படி உற்பத்தி இருந்தும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் முதலியன பற்றாக் குறையேயாம். இவற்றை உற்பத்தி செய்யக்கூடிய நிலங்கள் நம்மிடத்தில் இல்லையென்று கூறமுடியாது. நாட்டளவில் நிலங்கள் உள்ளன. நமது பகுதிகளில் செம்மண் சரளை மணல் நிலம் நிறைய உள்ளது.

விவசாயத்தை ஒரு தொழிலாகக் கருதிச் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் விவசாயம் போதிய பயனைத் தராது. இன்று விவசாயத் தொழிலில் அதிகமான பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் குறைந்த பட்சம் நான்கில் ஒரு பங்கினரையாவது வேறு தொழில்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 42 பேர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களில் 3.3 மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் விவசாயிகளிடம் நிலம் நபருக்கு 48 ஹெக்டேராக இருந்தது. இப்போது நபருக்கு 15 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.