பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காடு விவசாயிகள் 2% ஏக்கர் நிலமும் அதற்குக் குறைவான நிலமும் வைத்திருப்பவர்களேயாம். இந்தச் சிறு விவசாயி களின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகுதியும் பயன்தரக் கூடியதும், பண வருவாய் உடையதுமான உபதொழில் பால்மாடு வளர்த்தல், ஏன்?

வருவாய்க்கு உத்தரவாதம் உடைய தொழிலாகவும் அமையும். சிறு விவசாயிகள் தங்களது நிலத்தில் 0.80 ஹெக்டேர் நிலத்தை விவசாயத்திற்கும் 0.20 ஹெக்டேர் நிலத்தை கால்நடைத் தீவனம் பயிர் செய்வதற்கும் என்று ஒதுக்கி, அப்பகுதியில் சோளம், மக்காச் சோளம், கோ 1, கினியாகோ 2, போன்றவைகளை வளர்த்தால் பசுந்தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்.

மேலும் பயறு வகைகளை வளர்த்தால் மனிதருக்கும் உணவாகும். பயறு வகைத் தழைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படும். நிலத்திற்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

பசுந்தீவனத்தில் புரதச் சத்துள்ள சுபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, துவரை, வேலிமசால் போன்றவற்றை வளர்க்கலாம். இவற்றில் சுபா தழை மட்டும் சில விதிமுறைகளுடன் மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். 10 பங்கு சுபா தழையும் 2 பங்கு இதர பசுந்தழைகளுமாகக் கொடுக்க வேண்டும். தனி சுபா புல் மட்டும் தருவது நல்லதல்ல. தனி சுபா புல் மட்டும் கொடுத்தால் மாடுகள் கழியும்.

கால்நடை வளர்ப்பில் - பொதுவாகப் பால்மாடுகள் வளர்ப்பில் பசும்புல் முக்கிய இடத்தை வகிக்கிறது. எல்லா வகையான பசும் புற்களிலும், பயிர்களிலும் புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன.

சினியாப் புல், எருமைப் புல், யானைப் புல், கொழுக் கட்டைப் புல், அருகம்புல், மக்காச்சோளப் புல், சோளப் பயிர் ஆகியவைகள் பயன்படும். மேலும், புரதச் சத்து