பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மெல்லாம் கூட்டுறவு அடிப்படையில்தான் என்பது வரலாறு. இந்த நினைப்பு - சிந்தனை, நமக்குக் கூட்டுறவின்பால்; ஈடுபடத் துரண்டும்.

சில இடங்களில் கூட்டுறவு தோல்வி அடையலாம். இந்தத் தோல்விக்குக் காரணம் உள்ளார்ந்த கூட்டுறவு உணர்வு இல்லாமையே. தோல்விகளைக் கண்டு துவள வேண்டிய அவசியம் இல்லை. உயிர்ப்பும், உறவும், கூட்டுறவுப் பண்பும் உடையவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெற்று விடுவார்கள். இது உறுதி.

ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்!

ஒன்று சேர்ந்து உண்போம்!

ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்!

ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்!

எவரையும் வெறுக்காமல் இருப்போம்!


கூட்டுறவின் வழி வளம் காண்போம்! வாழ்விப்போம்! வாழ்வோம்! இதுவே நாம் செல்லவேண்டிய வழி - தடம்!

9. இலட்சிய சமுதாயம்

(8-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மானுட வாழ்க்கை தற்செயலாக ஏற்பட்டதும் அல்ல. அஃதொரு விபத்தும் அல்ல. இயற்கை நியதி. திட்டமிட்டுப் பரிணாம வளர்ச்சியில் வாய்த்தது இந்த வாழ்க்கை. அற்புதமான ஆற்றல்மிக்க புலன்களுடனும் பொறிகளுடனும் அமைந்தது இந்த வாழ்க்கை.

இப்படி அமைந்ததொரு வாழ்க்கை பயனுடையதாக, புகழ்மிக்கதாக அமைய வேண்டாமா? அமைவுகள் மிகுதியுமுடைய இந்த வாழ்க்கை எதற்காக அறிவு அறியும்