பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

405



அறிவியல் என்பது எதையும் ஆராய்ந்து தெளிந்து முடிவுகளை எடுப்பது, விருப்பங்களின் படியும் ஆசைகளின் அடிப்படையிலும் உணர்ச்சிகளின் நிலையிலும் முடிவு எடுத்தல் கூடாது.

வாழ்வதற்கும், பலர் கூடிவாழ்வதற்கும். இம்மாநிலம் பயனுறத்தக்க வகையில் இலட்சியத்தைத் தேர்வு செய்யவும். தேர்வு செய்த இலட்சியத்தை அடையும், முயற்சிகளுக்கும் அறிவு தேவை. அறிவியல் பார்வை தேவை. அறிவியல் சார்ந்த முடிவுகளும் செயல்களுமே வெற்றியைத் தரும். இலட்சியத்தைத் தேர்வு செய்க, அறிவியல் முறையில் ஆய்வு செய்து இலட்சியத்தைத் தேர்வு செய்க; அந்த இலட்சியத்தை அடையும் முயற்சியுடன் வாழ்க!

மனிதன் தனியே வாழ்ந்துவிட முடியாது. அவன் பலருடன் கூடி வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால், கூடிவாழ்கிறான். அதனால், அப்படிக் கூடி வாழ்வது அன்பின் அடிப்படையில், உறவுகளின் அடிப்படையில் இல்லை. நாடகம் நடத்துகிறான்; சுயநலத்திற்காகவும், பயத்திற்காகவும் கூடிவாழ்வதைப் போல நடித்து வாழ்கின்றான்.

அவன் அன்புடன் கூடிய உறவு வாழ்க்கையை கூடி வாழ்தலைப் பெரும் பேறாகக் கருதுவதில்லை. இத்தகைய மனிதக் கூட்டத்தில் அன்பு, கடைச் சரக்கேயாம்.

நம்முடைய நாட்டில் இன்னமும் சமுதாயம் உருவாக வில்லை. "ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்" என்ற சமுதாய நியதி, ஒழுங்கு, ஒழுக்கம் வெற்றி பெற்றால்தான் சமுதாயம் உருவாகும். இன்று மனிதகுலத்தை வருத்தும் தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டுமாயின், முதலில் சமுதாய அமைப்பு உருவாக வேண்டும். அங்ங்னம் ஒரு சமுதாயம் திடீரென்று உருவாகி